பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதைப் பார்வதியின் கழுத்திலே போட்டு விட்டான். "உனக்கு நான் தருகிற கல்யாணப்பரிசு இது' என் றான். அவனுடைய உணர்ச்சிகளை ஒழுக்கத்தோ கட்டுப்படுத்திக் கொள்ளத் தெரியும்; பார்வதி நான் வன்றேன்: ' மோகினிச் சிலை எப்படிப் பேசும்? காவல் வாகனத்தில் ஏறியவன், கீழே இறங்கினான். 'பா...ர்...வதி!' என்று விளித்தான். '"நான் உனக்குக் கொடுத்ததாட்டம், நீயும் எனக்கு ஒரு பரிசு கொடுக்க வேண்டாமா?. முன் பெல்லாம் ஒவ்வொரு விடியல் பொழு திலேயும் நான் இங்கே பறந்து வந்து உன் முகதரிசனத்துக் காகக் காத்துத் தவம் இருந்து, தொடுவானமாகத் தெரிந்த உன்னை தூரத்திலே இருந்து பார்த்த ஆறுதலோடு இங்கி ருந்து பிரிகிறசமயத்திலே, என்னோட மனசுக்குரொம்பவும் பிடித்தமான ரோஜாப்பூவை நானே பறிச்சுக்கிட்டுப்போயி டுவேனே?--ஞாபகம் இருக்குது, இல்லையா?. இப்ப உன் கையாலே ஒரு ரோஜாப்பூவைக் கிள்ளி எனக்குத் தா, பாருக்குட்டி!' என்று நெஞ்சம் தழதழக்கக் கெஞ்சினான். ரோஜாப்பூப் பரிசை செந்தில்நாதனிடம் சமர்ப்பிக்கின் ஹாள் பார்வதி. கழுத்தில் ஊசலாடிய சங்கிலி கணக்கவே தொட்டுப் பார்க்கிறாள்: ஆ! சங்கிலியோடு சங்கிவியாக ஊசலாடிக் கொண்டிருக்கிறது! ஊஞ்சலாடிக் கொண்டிருக் கிறது அந்த ரத்தச் சிலுவை1. 'பாருக்குட்டி, நான் வர்றேன்..போயிட்டு வர்றேன்!” செந்தில் எவ்வளவு அழகாகவும் அன்பாகவும் சிரிக்கிறான் கை விலங்கு அழுதது! 'போயிட்டு வாங்க, செந்தில்!' பூவும் பொட்டும் விடை கொடுத்தன்i

1 4 3

143