பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேர்ந்தாக வேணுமாக்கும்!-அப்பத்தான்,நீங்க எனக்கு விதிச்சு எழுதி வச்சிட்டுப் போயிருக்கிற அந்த விதியை கன்னித் தொழுவமாகிட்ட எனக்கு இட்டிருக்கிற அந்த ஆணையைக் கட்டிக் காத்து நிறைவேற்றி வைக்கவும் என் னாலே முடியுமாக்கும்! மறந்திடாதீங்க, செந்தில் மறந்: திடாதீங்க!... அப்பாலே எம் பேரிலே வருத்தப்பட்டுக் கண்ணிர்வடிச்சு எந்தப் புண்ணியம் கிடையாதுங்க, கிடைக் காதுங்க!. ஆமா, நான் முடிஞ்ச முடிவாய்ச் சொல்லிட். டேனுங்க!...” நெஞ்சை இறுக்கமாகவே பற்றிக் கொண்டவளாகஎந்தப் பற்றுமின்றிப் பற்றிக் கொண்டவளாக, நடை பழகு கிறாள். பார்வதி!... அதோ, 'டால்ஃபின் !... 'எனக்கு அக்கினிப் பரிட்சை நடத்தவே காத்துக் கிட்டு நிற்குது அந்த டால்ஃபின் !-பார்வதி இப்பொழுது நெஞ் சொடுங்கி உள்வட்டத்தில் விம்மிச் சுழல்கிறாள்! தோட்டம் வந்தது. நின்றாள் பார்வதி. சுடுநீரிலே. மஞ்சள் தாலி சுடுகிறது! அதோ! - அந்த ஒற்றை ரோஜாப்பூ மாத்திரம் உலகாளும் உமையவளாம் அன்னை பார்வதியைப்போலவே. ஒற்றைக் காலிலே வீரநேசத்துடனும் தீர வைராக்கியத்துடனும் தவம் செய்த வண்ணம், அழகாகவும் அன்பாகவும் புன்னகை செய்து கொண்டிருக்கிறது-இன்னமும்கூட! வேடிக்கைதான்!.

வாழிய செந்தமிழ்

145