பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொடுக்காததால் வெகுண்டெழுந்த கணவன், கட்டிய மனைவியையே நிர்வாணமாக்கித் துன்புறுத்திக் கடைசி யில் அவளைக் கழுத்தை நெறித்துக் கொன்று விட்டான்' பார்வதியின் எண்சாண்மேனி ஒரு சாணாகக் குறுகி விட்டது; வேர்த்துக் கொட்டியது. இப்படியும் ஒரு படு மோசமான காட்டுமிராண்டிப் புருஷன், பண்பாடு, பண் பாடுன்லு அல்லும் பகலும் வாய்கிழியப் பேசிக்கினு இருக்கிற இந்த அருமைத் தமிழ்மண்ணிலே, இன்னமும் உயிரோடு இருக்கானே? அடப்பாவி மனுஷா! சே!'ஆத்திரம் தூள் பறக்கக் கத்தினாள் பார்வதி. வரதட்சணை வாங்குவதும் கொடுப்பதும் சட்டப்படி, குற்றம் மட்டுமல்ல! சமூகக் களங்கமும்கூட!" ரேடியோ பாடம் படித்தது!... மெளனம் ஒரு பாஷை அல்ல; அது ஒரு சோதனை! தோழிமார்கள் மெளனம் கலைந்தனர். அப்பொழுதும், மறந்து விடாமல் புன்னகை செய் தாள் பார்வதி. அதைத்தவிர, வேறொன்றும் சொல்லத் தோன்றவில்லை. அவளுக்கு. ஆனாலும், வேறு ஒன்றை மட்டிலும் தனக்குத் தானாகவும், தன்னில் தானாகவும் கேட்டுக் கொள்ளத் தோன்றியது- எனக்கு மகாலட்சுமி அந்தஸ்து கிடைக்கிறது நடைமுறைக்குச் சாத்தியமான உண்மையாக இருந்திருந்தால். அந்த நாளிலேயே எங்கள் வீட்டிலே குபேரச் செல்வம் கொழித்திருக்க மாட்டாதா, என்ன? நானும் என்றைக்கோ கழுத்திலே மூன்று முடிச் சைப் போட்டுக் கொண்டு, அக்கா வைத்துவிட்டுப்போன மீதிப் பாரத்தையும் கழித்து விட்டு அக்கடா வென்று மாமியார் வீட்டில் காலை எடுத்து வைத்து நுழைந்திருக்க மாட்டேனா, என்ன?,-மேடைப் பிரசங்கத்திற்காக எழுதி வைத்திருந்ததை நெஞ்சிற்குள்ளே மனனம் செய்துகொள் ஆளுகிற பாவனையில், இப்பொழுதும்கூட அதே வாசகத்தை அச்சுக் குலையாமல் நினைவுகூர்ந்தாள் அவள்.

si

31