பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னைப்போலவே உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்த செந்தில்நாதன் எனக்காகக் காத்துக்கிட்டிருப்பார்!" "பேஷ்...பேஷ்! 'நானும் செந்திலும் ஒருத்தரை ஒருத்தர் உயிருக்கு உயிராகவும், உயிருக்கும் மேலாகவும் நேசிக்கிருேம், பார்வதி!' "ஓஹோ! அப்படியா?” "ஆமா!' சரி; உங்க ரெண்டுபேரோட காதலும் உயிரளவிலே தான் இதுவரைக்கும் ஐக்கிப்பட்டிருக்குதா? இல்லே. பார்வதி கேள்வியை முடிப்பதற்குள்ளே - தாரா பதிலே ஆரம்பித்தாள்; எங்களோட காதல் பவித்திரமானது: பரிசுத்தமானது; அதளுலேதான், அது இது வரையிலும் எங்களோட உயிர் அளவிலே யும் மனசின் அளவிலே யும் ஒன்றிக் கலந்து உறவாடிக்கிட்டே இருக்குது; மற்றப்படி, எங்க காதல் இந்த நிமிஷம் வரை எங்க உடல்களைத் தொற்றவே இல்லை; அப்படி தொற்றவும் நாங்க விடமாட்டோம்!-நட்பின் பேராலே மனம் விட்டுப் பழகிப் பேசிகிட்டு இருக்கத்தான் நாங்கலாட்ஜ் பிடிச்சோம்! என்னை நம்பு, பாரு!”, என்ருள் தோழிகள் நடை பயின்றனர். இப்போது அவள் கண்களும் நனையத் தொடங்கின:"தாரா! பெண் என்கிறவள் பூவாக இருக்கிறதிலேதான் ஆண்ணியம் உண்டு என்கிற வாதத்திலே, இருக்கிற நியாயம், பெண் என்பவள் பூ நாகமாக இருக்கிறதாலே

  1. 3

61