பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவம் இல்லை என்கிற பிரதிவாதத்திலேயும் இருந்தாக வேளுமாக்கும்?" தஞ்சாவூர்த் தலையாட்டி பொம்மையென தாரா தலையை ஆட்டினுள் சரி-நீ இப்ப என்னை என்ன செய்யச் சொல்லு றே?சொல், தாரா, சொல்!” விதிக்குக் கேள்வி கேட்கத்தானா தெரியாது? ‘'நீ என்னோடு அந்தப் பார்க் மட்டுக்கும் வரணும், பாரு! அங்கேதான், காலை வெய்யலில் பதிப்பகத்தின் முன்னிலையில் நடுத்தெருவில் தாராவும், அவளுக்குத் துணை நிழலாக வந்த செல்வப்பிள்ளை செந்திலும் துணை பிரிந்துஜோடியும் பிரிந்தும் ஸ்கூட்டர் விபத்துக்கு ஆளான சங்கதியை அவள் சற்றுமுன் காலாற நடந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போதும்கூட நினைத்துப் பார்த்து சலனம் அடைந்ததும் பொய் அல்ல! - தாரா, இருட்டிப் போச்சே? இன்னமும் இங்கே தியாகராய நகரிலேதான் இருக்கிறீயா? வீட்டிலே உன்னைத் தேடக்கீட மாட்டாங் களா?' என்று இயல்பான அனுசரணையோடு விசாரித் தாள். விசாரணையின் நிர்த்தாட்சண்யத்தை அவளால் கட்டுப்படுத்திக் கொள்ள இயலாமல் போயிற்று. தாரா தட்டித் தடுமாறியவளாக, நடைபாதையின் சிமெண்டுத் தரையில் கால் பெருவிரல்களால் கோலம் போட்டவள், குனிந்திருந்த தலையைத் தயக்கத்துடன் நிமிர்த்தினுள். கண்களின் இமை விளிம்புகளில் பணி படரலா யிற்று.

பாாவதிக்குச் சுருக்கென்றது; பதட்டமாக ஏறிட்டுத் தோழியை ஊடுருவினுள், - ---...- -

62