பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவிச்சுக்கிட்டு இருக்கேன்; இந்த லட்சணத்திலே, அந்நி ப்ோன்யமான உங்க காதல் விவகாாத்திலே, அந்நியமான நான் எந்த நல்ல வழியைச் சொல்லித் தர முடியம் போகுதோ, விளங்கல்லையே? சரி, சரி: டைம்’ ஆச்சு; விஷயத்துக்கு வா, தாரா' "நானும் செந்திலும் மனமாரவும் மனப்பூர்வமாகவும் காதலிக்கிற மாதிரியே, கல்யாணமும் பண்ணிக்கிட முடிவு செஞ்சிருக்கோம்!” அப்புறம் என்னவாம்? - ஒரு முகூர்த்த நேரத்தைக் குறிச்சு நீங்க ரெண்டு பேரும் எங்க கலப்புக் கலியானத் துக்கு எங்களோட பெற்ருேர் சம்மதம் தெரிவிச்சுப் பச்சைக் கொடி காட்டிடுவாங்கண்ணு எங்களுக்குத் தோணவே இல்லை!...அதனலே -’’ "அதனுலே..." “அதேைல, நானும் செந்திலும் உன்னையே சாட்சி வச்சு, முப்பாத்தம்மன் சந்நிதானத்திலே கல்யாணம் பண்ணிக்கிட வேணும்னு தீர்மானிச்சிருக்கோம், பாரு!’’ இருந்திருந்தாற்போல அங்கே பரவத் தொடங்கிய, பயங்கரமான மெளனத்தை மென்று விழுங்கியவாறு, தீர்ப்புப் படிப்பது போலக் கூறினுள் பார்வதி:

"தாரா, நீயும் மிஸ்டர் செந்திலும் மேஜர் ஆனவங்க: சட்டப்படி, சுதந்திரம் ஆணவங்க, அதனலே உங்க காத லுக்குக் குறுக்கே நிற்கிறத்துக்கு எந்தச் சக்தியாலேயும் முடியாது: மூடியவே முடியாது. ஆலுைம் உலக சம்பிர தாயத்தை மறந்து. உங்களுக்குண்டான கண்ணியமானகட்டுப்பாடான கடமையையும் மறந்து, நீங்க இரண்டு பேரும் உங்களோட அருமையான பெற்ருேர்களைத் துறந்த நீங்க உங்க மனம்போன போக்கிலே, அம்பாள் சந்ததியிலே கணவனும் மனைவியுமாக ஆகிடணும்னு முடிவு செஞ்சிட்ட இந்தக் கலியாணத்திலே என்ன எதுக்கு

64