பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமையாவுக்கும் அழுகையில் பாகம் கிடைத்தது. நடந்த கண்ணிர்க் கலாட்டாவில் சிவகாமியின் கண்கள் திறந்தன. ஆத்மநாதனுக்கு வாயெல்லாம் சிரிப்பு ஆகிவிட்டது: இல்லத்தரசியின் சுருக்கம் விழுந்து வெளுத்துக் கிடத்த நெற்றிமேட்டில் ஒதுங்கிக் கிடந்த வெள்ளை மயிரிழைகளை நோகாமல் ஒதுக்கி விட்டார். பிறகு, நெஞ்சோடு நெஞ்சை இருத்தி, 'சிவகாமி! சாந்தி முகூர்த்தம் நடந்தப்போ நாம ரெண்டுபேரும் செஞ்சுக்கிண ஒப்பந்தத்தை மறந்திட மாட்டியே?. நீ போறதானுலும், என்கிட்ட ஒரு வார்த்தை கட்டாயம் சொல்லிப்பிடு; நான் போறப்பவும், உன் கையிலே நிச்சயம் சொல்லிப்பிடுவேன்!" என்ருர். . விதரண புரிந்த அக்காவும் தம்பியும் விவரம் புரிந்து விம்மி வெடித்தனர். "கடைசிப் பட்சம் நம்ம பாரு குட்டியை மாலையும் கழுத்துமாவும் தாலியும் மெட்டியாவும் பார்க்கிறமட்டுக்கு மாவது, நாம ரெண்டு பேரும் சத்தியமாய் உசிரோட இருப்போமுங்க, அத்தான்!. இந்த ஒரு நாயமான பிரார்த்தனையைக் கூட நல்லபடியா நிறைவேற்றித் தர எந்த ஒரு தெய்வத்துக்கும் முடியலேன்ன-தெரியலேன்ன அப்பறம் தெய்வம் உண்டுண்ணு நம்மாலே எப்படி நம்ப முடியுமாம்? அப்பாலே நாலு பேரைப் போலவே, நாமளும் ‘சாமியும் இல்லே, பூதமும் இல்லே அப்படின்னு பிரசங்கம் பண் ண வேண்டியதுதான்!' х இப்படியெல்லாம் தர்க்கமும் குதர்க்கமும் பேச எங்கே கற்றுக் கொண்டாள் சிவகாமி?-அவள் வாயை அவர் பொத்தினர்.

கண்ணிரோடு உள்ளே சென்றவள் தண்ணிரோடு வெளியே வந்தாள். ராத்திரி சாப்பிட வேண்டிய ரத்த விருத்தி மாத்திரையைச் சாப்பிடல்லேதானே?’ என்று

67