பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

",பார்வதி...என்று பலத்தகுரலில் கூவியபடி ஒரே ஒட்டமாக ஓடி வந்த மாதங்கி பலமான புன்ன கையோடு பார்வதியின் நடுங்கிய கைகளைப் பிடித்துக்கொண்டு, "உன்னோட வீம்பு எனக்குப் புதுசா?" என்று கூறிச் செல்ல கோபம் சிந்தினாள். பார்வதி திமிறினாள், மாதங்கி விட்டுவிடுவாளா? ...ரத்தச்சிகப்பில் பயமுறுத்திய மாதங்கியின் நவீன பாணிக் காரின் எண்களில் திடீரென்று மின்னல் வெளிச்சி' வெட்டிப் பாய்ந்தது. சங்கத்தமிழ் விளம்பரம் பேசுகிறது. அதே நேரத்தில் காவல் துறை வாகனம் ஒன்று சீறிப்பாய்ந்து அங்கே திரும் பிக் கொண்டிருந்தது. . . மறுவினாடி, பார்வதியின் கைகளே உதறிவிட்டுத் தன்னுடைய காரை நோக்கிப் பாய்ந்தாள் மாதங்கி, - அந்த இளைஞன் தவித்தான். பார்வதி ஒதுங்கினாள், . திரும்பிக் கொண்டிருந்த காவல் வாகனம் ஒரு வழியாக' அங்கே வந்து நின்றது! அடேடே! ஏமாற்றத்தில் விகளந்த ஆத்திரத்தில் அது பாயும் புலி ஆனது. கண்கொட்டும் கணத்தில், மாதங்கி எங்கே மறைந் தாள்?..ஏன் பிரிந்தாள்?. எப்படிப் பறந்தாள்?. அரையும் குறையுமாகத் தொலைவிலிருந்து பார்க்ச் நேர்ந்த நாடகம், கதையும் புரியாமல் காரணமும் விளங் காமல் அரைகுறையாகவே முடிந்து விட்டதால் விகள்ர் திட்ட ஏமாற்றத்தைப் பார்வதியால் அப்போது பொறும்ை யாக ரசிக்கவும் முடியாமல் போய்விட்டது.

rr

77