பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெளிக் கதவை திறந்து வைத்துக் கொண்டு, விளக்கின் அடியில் தூணில் சாய்ந்தவாறு நின்றுகொண்டிருந்தார் பெரியவர் ஆத்மநாதன், பார்வதிக்குப் போன உயிர் திரும்பியது!-அப்பாவுக்கு ஒன்றும் ஆகிவிடவில்லை!-தெய்வமே! - "அக்கா நான் போய் வரட்டுமா?" -ரிக்ஷா போனது. 'ஏதாச்சும் சாப்பிட்டுட்டுப் போ. ராத்திரியே மோர் காணல்லே. இரு: பானைத் தண்ணி ஒரு குவளை கொண்டு வர்றேன்!" காக்குருவி எங்கேயோ, ஏனோ கத்திக் கொண்டிருக் கிறது. 'அக்கா, அந்தக் கொள்ளிவாய்ப் பிசாசு விஷயத்திலே நீங்க எப்பவும் உஷாராகவே இருக்க வேணும்'

பாசப் பிரிவினை தற்காலிகம்!...

82