பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூடத்தில் ஒளி வெள்ளம். முகூர்த்த நேரத்தில் மணவறையிலே போய் அமர்ந்து கொள்ளப் போகும் திருமணக் கன்னியாகவே வந்தாள் பார்வதி! கைகூப்பினுள்; விழிகளே நிமிர்த்தி விட்டாள். பார்வதி குடும்பப் பாங்கோடு நமஸ்காரம் செய்ததை மாப்பிள்ளையின் அருகதையைப் பெற்றிருந்த நாராயண் அங்கீகரித்து ஏற்றுக் கொண்டான். அதற்கு அதிகாரபூர்வ மான அடையாளமாக ஒரு புன்சிரிப்பையும் வெளியிட் டான். சபையில் அதீதமான பரபரப்புடன் கூடிய செயற்கை யானதோர் அரைக்கண அமைதி நிலவிக் கலைகிறது. எதிர்ப்புறத்தில் சம்பந்தித் தரப்பிலிருந்து மாப்பிள்ளை இளைஞன் தனக்குப் பெண் பிடித்து விட்டதாக நெஞ்சு நிரம்பின நிறைவோடு ஒ. கே. சொல்லி பச்சைக்கொடி காண்பித்தான். வறுமைக் கோடு பற்றி நினைத்துக்கூட பார்க்காத அளவிற்கு நடுத்தர வர்க்கத்தின் சீரான செழிப்பு மண்டிக் கிடந்த அவன் வதனத்தில் ஆனந்தமான கனவுகள் ஆர்ப்பரித்தன. அக்கணத்திலேயே அழகின் உச்சி யில் நின்ற அபலை பார்வதியை மனேவியாக ஆக்கிக் கொள்ளும் பாக்கியத்தைத் தட்டிப் பறித்துக் கொண்டு. விட்ட கனவுகளில் அவன் மயங்கி மிதந்து கொண்டிருக்க svirtil - R மாப்பிள்ளை வடிவத்தில் வந்து தெய்வமே நல்ல தீர்ப்பை சொல்லியிருப்பதாக நினைத்துப் பார்வதியின் தாயும் தந்தையும் ஜோடி சேர்ந்து ஆறுதலையும் அமைதி: யையும் அனுபவித்தார்கள்.

பார்வதியோ தனக்குச் செல்வத்தைக் கொடுக்கத் தெரியாத கடவுள் அற்புதமான அழகை. வாரி வழங்கத்

90