பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பாவையும் அம்மாவையும் விளித் தாள் பார்வதி. அவர்களோ விழித்தனர், பார்வதி சொன்னுள் : நானே கனவிலேகூட நினைச்சுப் பார்த்திராத வகை பிலே சாயரட்சை விரும்பாத சம்பவம் விரும்பாத முறை யிலே, முறை தப்பி நடந்து போச்சு, இது நான் எந்த வகை யிலேயும் காரணம் ஆக முடியாதுங்க. எல்லாத்துக்குமே மாப்பிள்ளையாகி மாயமாய் வந்த மிஸ்டர் நாராயணன் தான் காரணம்!... அன்று இரவு பார்வதி - அப்பா அம்மாவை அழைத்தாள், சொன்னுள்: 'வெறும் வியாபார நோக்கமும் மோக வெறியும் கொண்டு என்னேப் பெண் பார்க்க வந்தவரோட மனிதத்தன்மை தடம் புரண்ட ஈனப் புத்தியை அவரோட வாய்ப்பேச்சே அம்பலப் படுத்திடுச்சு. வாழ்ந்து கெட்ட நம்ம குடும்பத்தோட மூன்ரும் பேருக்குத் தெரிஞ்சிராத கஷ்டநஷ்டங்களேயெல்லாம் ஈடு வச்சுக்கிட்டு இரக்கத்தின் பேரைக் காட்டி, வரதட்சணை வேண்டாம்’ அப்படின்னு அப்போதைக்குக் காரியத்தை முடிச்சுக்கிடச் சொன்னதெல்லாம் போலித்தனமான பாசாங்கு என்கிற, உண்மையை என் ஒருத்தியாலேதான் புரிஞ்சுக்கிடவும் முடியும்! கல்யாணம் என்கிறது. ஆயிரம் காலத்து பயிர்னு வாய்க்கு வாய் எல்லாரும் சகஜமாய்ப் பேசிக் கிங்க. அந்த கல்யாணப் பயிரைக் கேவலம், ஒரு அஞ்சு, பத்து வருஷத்துக்காச்சும் வாடச் செய்திடாம, இவங்க காப்பாத்திடுவாங்க என்கிற சத்தியம் என் நெஞ்சிலே உறைக்கவே மறுத்திடுச்சுங்களே?--நான் என்ன செய் பட்டும்? உங்க தூக்கத்தையும் இனிமேலும் கெடுத்திட்டா, அந்தப் பாவமும் என்னே சும்மா விடாது!-முடிஞ்சமுடி வாய்ச் சொல்லிட்றேன்; நல்லாய்க் கேட்டுக்கங்க; நீங்க ரெண்டு பேரும் கண் பார்க்கவும் மனம் பார்க்கவும் கூடிய சீக்கிரத்திலேயே, எனக்குப் பிடித்தமான உண்மையான ஒரு மனிதரைத் தேடிக் கண்டு பிடுச்சு, உங்க ரெண்டுபேரோட

总萄

94