பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கமலியின் அன்பு தனி; பாசமும் தனிதான். சொல்லப் போனால், அன்பின் அர்த்தங்களையெல் லாம் அறிவு பூர்வமாகவும், உணர்வுபூர்வமாகவும் பார்வ திக்குப் படித்துக் கொடுத்தவள் கமலி என்றுகூடச் சொல்லி விடலாம். நடப்பும் அதுவே. கமலி!' - உள்வட்டமாகப்பாசம் விம்மியது; தவித்தது: ஏங்கியது; உருகியது கமலி என்றால், கமலிதான்! அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இஷ்டம் இல்லாமலே தன் இஷ்டப்படி கமலி வாங்கிவைத்துவிட்டுப்போனஎவர்சில்வர் குடம் அது. பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டுக்குப் புறப்பட ஆயத்தப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில், பாண்டிபஜாரில் நூற்றி அறுபது ரூபாய் சுளைசுளையாக எண்ணி கொடுத்து வாங்கிக் கொடுத்தாள். முன்பு கல்யா ணத்தின்போது, எலுமிச்சை நிறத்திலே உயர்வான பட்டுப் புடைவையைப் பார்வதிக்கு வாங்கித் தரவில்லையா கமலி? ... காந்தி மகாத்மாவுக்குப் பொய் பேசத் தேவை கிடை யாது! - அன்பு எதையும் கேட்பதில்லை. எதையும் கொடுக் கவே செய்யும்! தென்றல் சுகமாக ராகம் பாடியது. பாதங்களில் என்னவோ இழைந்த மாதிரி இருந்தது அமெரிக்கையாகவும் நிதானமாகவும் குனிந்தாள்: கரப் பான் பூச்சி ஏற்றி விட்டாள். கமலியானால், இந்நேரம் வீடு துள்பட்டிருக்கும்; தங்கச்சிக்குத் தைரியம் ரொம்பத் தான்: ஆனாலும் பொம்பளைங்களுக்கு இவ்வளவு துணிச்சல் தேவைதானாக்கும்?' என்பதாகத் தன்னுடைய மாமூலான பல்லவியைப் பாடியிருப்பாள். பார்வதி சலனம் அடைந்தாள்!- கமலி... பாவம்! சொல்லப்போனா, ஆம் பளைங்களைக் காட்டிலும் பொம்பளைங்களுக்குத்தான்

st 3

13