பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடகுக்குப் போய் விட்டதால். அவளுடைய உள் அழகும் உடன் சேர்ந்து போய்விடாது. போய்விடவும் முடியாது. வகிடு எடுத்துச் சரிபார்த்துத் தலை வாரிக் கொண்டு. மையம் பார்த்துக் குங்குமம் வைத்துக் கொண்டாள். பூவை யைத் தேடிப் பூவும் நாடிவந்ததில் அவள் மகிழ்ந்தாள். நாளைக்கு முதல் தேதி என்றும் நினைவுகொசிறு தட்டி யது. பிசிறு பாய்ந்த ஆறுதல் எட்டி ஓடியது:- "இங்கேயும் வழக்கம் போல், பற்றாக்குறை பட்ஜட்தான். பணத்தைக் கொடுத்து விட்டால், நகையைக் கொடுத்து விடுவார் சேட்ஜி. பணத்தை யார் கொடுப்பது?- கடவுளா? எந்தக் கடவுள்? ஏதோ ஒரு கடவுள்!. அந்தக் கடவுள் என்றைக் குப் பணம் தருவார்?... என்றைக்குச் சங்கிலியை மீட்பது? என்றைக்கு அப்பா- அம்மா சந்நிதானத்திலே மாப் பிள்ளை புடைசூழ மாலையும் கழுத்துமாகத் தோன்றி அவர்களின் பெற்ற வயிறுகளில் அசலான மாலை வார்த்து அவர்களையும் மகிழச் செய்து, நானும் மகிழ்ச்சி அடை வதா? என் பிரச்னையைத் தீர்த்து வைக்க ஒரு கம்யூட்ட ராவது கண் பார்க்கலாகாதா?- மூச்!. புதிய கோட்டையை ஆக்கிரமித்து அங்கே கொடி கட்டிப் பறக்கத் திட்டம் புனைந்தவர் போன்று, நின்றது நிலைக்கத் தீவீரமாகச் சிந்தனைவசப் பட்டிருந்தார் அப்பா. அம்மா உப்புமா பிளேட்டுடன் வந்தாள். 'டி.பன் 'சாப்பிட்டியா, பார்வதி' என்றாள். ஊம் கொட்டிய திருமகளைப் பார்த்ததும், தேள்கொட்டிய வேதனையை அடைந்தாள், ! உன் கழுத்தில் டாலர் செயினைக்காணல் லையேம்மா? என்று பரதவிப்போடு விசாரணை தடத்தினாள். நடந்தகதை நடந்தது.

வாய் அடைத்தது.

98