பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீங்க என்னா பேசு lங்க, மிஸ்டர் செந்தில்நாதன். "'உங்களாலே என்னை நம்பவே முடியலையா, மிஸ் பார்வதி?’’ மெளனம் ஒரு பாஷை ஆவது கிடையாது. பார்வதியின் கண் எதிரில், பொம்மலாட்டம் ஒன்று. ஊமைத்தனமாக ஆட்டம் காட்டிற்று! - மூன்று நாட் களுக்கு முன்னதாக, தலை போகிற அவசர ஆத்திரத்தில் சமூகவேசி மாதங்கியோடு அவளுடைய காரிலே இதே செந்தில் பறநது சென்றது பொய்யா? அதற்கெல்லாம். முந்தி, இதே செந்தில் பதிப்பகத்தின் வாசலில், பொது: ஜனங்கள் புடை சூழ்ந்து மரியாதை தெரிவிக்க, தாரா வோடு ஸ்கூட்டரில் வந்து அடிபட்டு வீழ்ந்து கிடந்தானே அது கதையல்லவே?-கண்களிலே தொடு வானம் காட்டித் தலையை ஏறிட்டு நிமிர்த்தினாள் கன்னி இளம்மான், செந்தில்நாதன் வேட்டியை மடித்து "டப்பா கட்டு கட்டியபடி, "நான் கொடுத்து வைக்காத பாவி!... வர்றேன்!” என்று நா தழதழக்கக் கூறிவிட்டு, அங்கிருந்து பதட்டத்தோடு நகர்ந்தான். கண்களிலே சுடுநீர் மின்னி. யது!

  • மிஸ்டர் செந்தில்! நில்லுங்க; நானும் வர்றேன்:எப்போதும் எனக்கு நானேதான் துணை இருக்கிறது. வளமை; இப்ப நீங்க வேறே எனக்குத் துணை இருக்கீங்க, அப்புறம் எனக்கு என்ன கவலை?’’

பார்.மிஸ் பார்வதி: தாங்க்யூ வேரி மச். ஆபத்தான அவசரம்: அவசரமான ஒரு ஆபாசக் கடமை...ம்...புறப் படுங்க!' . பரிசுத்தமான விடியல் பொழுதுகளிலே, தன்னைப்

103

103