பக்கம்:கன்னித் தமிழ்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

கன்னித் தமிழ்


“இதோ, இந்திரன் பூனையாக ஓடுகிருன்.’ :இந்த மங்கையைப் பார்; இவள்தான் அகலிகை.” ‘கண்ணிலே கோபம் சுடர நிற்கிருனே, இவன் கெளதம முனிவன்.’

“அவனுடைய கோபத்தால் கல்லாகிக் கிடக்கிற அகலிகையைப் பார்.”

இவ்வாறு ஓவியங்களை ஒன்றன்பின் ஒன்றாகக் காட்டிப் பேசிக்கொள்கின்றனர் மக்கள். இப்படிப் பல பல ஓவியங்கள் அந்த எழுத்து நிலை மண்டபத்தில் இருந்தனவாம்.

என்றுாழ் உறவரும் இருசுடர் நேமி ஒன்றிய சுடர்நிலை உள்படு வோரும் என்பது துருவச் சக்கரத்தைப் பார்த்து மகிழ்பவரைப் பற்றிச் சொல்லும் பகுதி. சூரியன் நடுவிலே உற அதனோடு பொருந்த வரும் பெரிய சோதிச் சக்கர மான துருவ சக்கரத்தோடு பொருந்திய பலவகைச் சுடர்களின் அமைப்பு முறையைக் கண்டு ஈடுபடுபவர் களும்’ என்பது இதன் பொருள்.

இரதி காமன் இவள் இவன் எஞஅ விரகியர் வினவ விஇைறுப் போரும் என்பது, இணைந்த காதலர்கள் ரதியையும் காமனையும் கண்டு களிப்பதைக் கூறும் பகுதி. -

இந்திரன் பூசை, இவள் அக லிகை, இவன் சென்ற கவுதமன், சினனுறக் கல்உரு - ஒன்றிய படிஇதென் றுரை செய் வோரும். இது அகலிகையின் கதையை ஓவியத்திலே காண் போரைப் பற்றியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/102&oldid=1286009" இலிருந்து மீள்விக்கப்பட்டது