பக்கம்:கன்னித் தமிழ்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

கன்னித் தமிழ்


வித்தகர் இயற்றிய விளங்கிய கோலம் என்று சிலப்பதிகாரத்திலும்,

வித்தக வினைஞர் பத்தியிற் குயிற்றிய சித்திர சாலை என்று பெருங்கதையிலும் இப் பெயர் வருகிறது. மெய்ஞ்ஞானம் படைத்தவர்களை வித்தகர் என்பது இந்த நாட்டு மரபு. சிந்தசைத்தி படைத்தவர்களையும் வித்தகர் என்று சொல்வது பொருந்தும். ஒவியப் புலவர்கள் வெறும் தொழிலாளிகள் அல்ல. கண்ணும் கையும் படைத்தவர்களெல்லாம் சித்திரம் வரைந்துவிட முடியாது. கருத்திலே நிணந்து நிணந்து நிறை வெய்திய கற்பனையை உருவாக்குபவனே கலைஞன். சிந்தசைக்தி இல்லாதவன் கலைஞன் ஆகமுடியாது. ஓவியக் கலைஞனும் சிந்தணுசக்தியும், கற்பனை வளமும் பொருந்தியவன்; ஆகையால் மெய்ஞ்ஞானியருக்குரிய வித்தகன் என்ற பெயர் அவனுக்கு ஏற்புடையதா யிற்று.

மணிமேகலை ஒரு பளிங்கறைக்குள்ளே இருந் தாள். அசைய்ாமல் அவள் நின்றபோது உதயகுமாரன் என்ற அரச குமாரன் அங்கே வந்தான். கண்ணுடி அறைக்குள்ளே மணிமேகலை நிற்கிரு ளென்பதை முதலில் அவன் உணரவில்லை. சுற்றிலும் சித்திரக் கைவினை திசைதொறும் செறிந்தனவாக இருந்தமை யால், அந்தச் சித்திரக் கூடத்துள் அமைத்து வைத்த பாவை என்று முதலில் எண்ணினன். மற்றப் பெண் களைப்போலச் சிறந்த அலங்காரம் ஒன்றும் இல்லாமல், தனியாக அழகே உருவெடுத்து வந்தாற் போன்று நின்றாள் மணிமேகலை. அந்த உருவம் வழக்கமாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/108&oldid=1286011" இலிருந்து மீள்விக்கப்பட்டது