பக்கம்:கன்னித் தமிழ்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலே இன்பம் 109.

விடுகின்றன. உடம்பால் பிரயாணம் செய்வதில்லை என்பது உண்மை; ஆனல் உள்ளத்தால் பிரயாணம் செய்கிருேம். அந்தப் பிரயாண மார்க்கத்தைக் கலைப் பொருள் திறந்து காட்டுகிறது; நம்மை மறக்கச் செய்கிறது.

சதா வழவழ என்று பேசிக்கொண்டிருக்கும் ஒரு பெண்மணி தன்னுடைய கணவனுக்கு எப்போதும் தலைவலியைக் கொடுத்து வந்தாளாம். அந்தப் பெண் மணி ஆக்ராவிலுள்ள தாஜ்மகலுக்கு வந்தாள். ஏதா வது புதிய பொருளைக் கண்டால் அவள் பேச்சுத் தொடங்கிவிடும். அப்புறம் கடவுள்தான் அவள் வாயை அடக்கவேண்டும். அவர் அப்படி அடக்குவதாகத் தெரியவில்லை. தாஜ்மகலேப் பார்த்தாள். அந்தக் கலைப் படைப்பின் அழகிலே அவள் தன்னை மறந்துபோனுள். அவள் வாயடைத்து மெளனமாகி நின்றாள். அவளைப் பார்த்து, அவளுடன் வந்த ஒருவர், இறந்தவர் பிழைத்து விட்டால் எப்படிப் பிரமிப்பாரோ, அப்படிப் பிரமித்தார். உடனே அந்த அம்மாளின் கணவருக்குத் தந்தியடித்தாராம்; உங்கள் மனைவி மெளனமாகி, விட்டாள்” என்றுதான். -

கலையிலே தன்னை இழப்பதற்கு இதைக் காட்டி லும் வேறு உதாரணம் தேவை இல்லை. சிற்பம்,சித்திரம், இசை, கவிதை எல்லாமே நுட்பமான கலைகளின் வகை. எல்லாம் நம்மை வேறு உலகத்துக்கு அழைத் துச் சென்று நம்மையே மறக்கச் செய்கின்றன.

பழைய சங்க காலத்து நூல் ஒன்றில் ஒரு செய்தி வருகிறது. இசையிலே 4ഖങ്ങുക്കl-l. urrfಹನ।

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/117&oldid=612701" இலிருந்து மீள்விக்கப்பட்டது