பக்கம்:கன்னித் தமிழ்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

கன்னித் தமிழ்


ருக்கு அந்தக் காலத்தில் கணக்காயர் என்ற பெயர் வழங்கி வந்தது. கணக்கு என்பது நூலுக்குப் பெயர். அதைக் கற்பிக்கிற தலைவர் கணக்காயர். நக்கீரர் என்ற புகழ்பெற்ற சங்கப் புலவருடைய தகப்பனர் மதுரையில் வாழ்ந்த ஒரு சிறந்த உபாத்தியாயர். இப் போதும் மரியாதையாக ஒரு கிராமத்தில் உள்ள உபாத்தியாயரைப் பேர் சொல்லாமல், வாத்தியார் ஐயா’ என்று சொல்வதில்லையா? அதுபோல அவரை எல்லோரும் கணக்காயர்’ என்றே அழைத்து வந்தார் கள். அதனுல் நாளடைவில் அவர் பெயர் மறந்து போகவே மதுரைக் கணக்காயனுர்’ என்ற பெயர் நிலைத்து விட்டது. பழைய புத்தகங்களில் நக்கீரர் பேர் வரும் இடங்களில் எல்லாம் மதுரைக் கணக்காய ர்ை மகளுர் நக்கீரனர் என்று எழுதியிருப்பதைக்

காணலாம்.

இந்தக் காலத்தில் வாத்தியார் ஐயா இளப்பமான பேர்வழி ஆகிவிட்டார். போதாக்குறைக்கு அவரைப் பற்றி எத்தனையோ கதைகள் கட்டி அவற்றின் மூல மாகவும் அவரைச் சேர்ந்தவர்களுக்குப் பெயர் வைத் திருக்கிறார்கள். டாளுக் கூட்டம் என்றும், அண்ணுவி கள் என்றும் சமுதாயத்தின் ஒதுக்குப்புற வாசிகளாக அவர்கள் இருக்கிறார்கள். சமூகத்தில் அவர்களுக்கு மதிப்புக் கொடுப்பதில்லை என்பது ஒரு பக்கம் இருக் கட்டும். அவர்களே ஒருவருக்கு ஒருவர் மதிப்பு வழங்குவதில்லை. வேறு ஒரு வேலையும் கிடைக்கா விட்டால்தான் படித்தவர்கள் வாத்தியார் வேலைக்கு வருகிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் உற்சாகம் இல்லாமல் இருக்கிறார்கள். அதற்குக் காரணம் அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/128&oldid=1286020" இலிருந்து மீள்விக்கப்பட்டது