பக்கம்:கன்னித் தமிழ்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியச் சாலே 5

ஒப்புக் கொள்ளலாம். தமிழ் நாட்டில் மிகப் பழங்கால முதலே மனிதர் வாழ்ந்து வருகின்றனர் என்ற செய்தி இந்த ஆராய்ச்சியினல் வெளியாகிறது.

இலக்கியம் மனிதனுடைய படைப்பு. அறிவின் எல்லை ஓரளவு உயரத்தை எட்டினல், தினந்தோறும் வாழ்க்கைக்கு உதவுகிற வெறும் பேச்சாக நின்ற மொழியில் இலக்கியம் மலர்கிறது. சரித்திரத்துக்கு எட்டாத காலம் முதல் மன்ரிதன் வாழ்ந்து வந்த தமிழ் நாட்டில், அவனது வாழ்க்கை பேச்சு நிலையினும் உயர்ந்து, இலக்கியச் செல்வத்தைச் சேமிக்கும் நிலைக்கு வந்த காலமும் மிகப் பழங்காலமாகத்தான் இருக்க வேண்டும். அக்கால முதல் இலக்கியம் தோன்றி வளர்ந்து வருகிறது. அந்த இலக்கியச் செல்வங்களில் பல அழிந்தும் விடுகின்றன.

இப்போது நமக்குக் கிடைக்கும் சாட்சிகளை வைத்துக்கொண்டு பார்த்தாலே தமிழன் எத்தனையோ பெரிய காரியங்களைச் சாதித்திருக்கிருன் என்று தெரிய வரும். தமிழ்ச் சமுதாயப் பிரயாணத்தில் அவன் வகுத்துக்கொண்டே வரும் இலக்கியப் பெருவழியை நாம் கவனித்தோமானுல் எத்தனையோ வகையாக அது படர்ந்து வருவதைக் காணலாம்.

முதற் சங்கம், இடைச் சங்கம் என்ற பகுதிகளின் இலக்கியச் சாலை நம் கண்ணுக்குத் தென்படவில்லை. ஏதோ ஒர் அழகிய செல்வ மாளிகை மாத்திரம் புலன கிறது. அதற்குத் தொல்காப்பியம் என்றுபெயர். அப்பால் கடைச் சங்கம் என்ற பகுதியில் தமிழ் இலக்கியப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/13&oldid=612744" இலிருந்து மீள்விக்கப்பட்டது