பக்கம்:கன்னித் தமிழ்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

கன்னித் தமிழ்


வழியை உபதேசிக்கும் ஆசிரியர் தெய்வ நம்பிக்கை உடையவராக இருந்தால்தான் மாளுக்கர்களிடத்தி லும் அது வளரும்.

குரு பெருந்தன்மை உடையவராக இருக்க வேண்டும். சிறிய விஷயத்தைப் பெரிதாக்கி வீண் சச்சரவுகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது. வாழ்க்கை முழுதும் பயன்படும் சாதனைகளை மாளுக்கர்களுக்குப் பயிற்றும் மாபெருந் தொண்டில் ஈடுபட்டவர் உபாத்தி யாயர். அவர் சில்லறை விஷயங்களில் கவனத்தைச் செலுத்தில்ை அவருடைய குறிக்கோள் சிதறிவிடும்; திண்மை கலங்கும். இந்தப் பெருந்தன்மையை “மேன்மை’ என்று இலக்கணக்காரர்கள் குறிக்கிறார்கள்.

குலமும், அருளும், தெய்வங் கொள்கையும், மேன்மையும் ஆகிய உயர் குணங்கள் ஆசிரியர்பால் இருக்க வேண்டுமென்று சொல்வதன் மூலமாக இலக்கண நூல்கள், அவர் மனிதருட் சிறந்தவராக இருக்க வேண்டும் என்பதையே வற்புறுத்துகின்றன.

3

வாத்தியார் ஐயா மனிதருட் சிறந்தவராக இருக் கிறார். போதுமா? அவர் நன்றாகப் படித்திருக்க வேண்டும். பல நூல்களை வெறுமனே கணக்குப் பண்ணிப் படித்திருந்தால் மட்டும் போதாது. படித்த தைத் தெளிவாகத் தெரிந்து கொண்டிருக்கவேண்டும். தெளிவு இல்லாமல் அவருக்கே சந்தேகம் இருந்தால் அவரிடம் படிக்கும் மானுக்கர்கள் உருப்படுவது எப்படி? ஆகவே அவர் கலை க ள் பயின்றிருக்க வேண்டும். பரீட்சை கொடுத்துப் பட்டம் பெற்றிருந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/132&oldid=1286022" இலிருந்து மீள்விக்கப்பட்டது