பக்கம்:கன்னித் தமிழ்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

கன்னித் தமிழ்


தெரிவரும் பெருமையும்

திண்மையும் பொறையும் பருவம் முயற்சி

அளவிற் பயத்தலும் மருவிய நன்னில

மாண்பா கும்மே. (பொறை - பொறுமை. பயத்தல் - பயன்படுதல். மாண்பு - இயல்பு.1 -

மலை என்ற மாத்திரத்திலே அதனுடைய உன்னத மான சிகரங்களும் பரப்பும் நம் நினைவுக்கு வரு கின்றன. மலை அளப்பதற்கு அரியது. எத்தனையோ உபயோகமான பொருள்கள் அதன்கண் விளைகின் றன. அவற்றிற்கும் ஓர் எல்லை இல்லை. பெரிய மனிதர்களை மலைக்கு ஒப்பிட்டுப் பேசுவது நம்மவர் வழக்கம். மலையைப் போன்ற சரீரம் உடையவராக இருப்பவரையா அப்படிச் சொல்கிறார்கள்? இல்லை. இல்லை. நிலப்பரப்பில் மேடும் பள்ளமும், ஆறும் குளமும், வயலும் பொழிலும் இருந்தாலும் மலைதான் எல்லோருடைய கண்களிலும் முதலில் படுகிறது. அதுபோல ஒரு நாட்டிலோ, ஒர் ஊரிலோ யார் வந்தாலும் அவர்கள் காதில் யாருடைய புகழ் முதலில் விழுகிறதோ அவரே பெரிய மனிதர். அந்த ஊருக்கு வராமலே அந்தப் பெரிய மனிதருடைய புகழைப் பலர் அறிந்துகொண் டிருப்பார்கள். வாத்தியார் பெரிய மனிதராக இருக்கவேண்டும். அளக்கலாகா அளவு உடைய மலையைப்போல விளங்க வேண்டும்.

மலையில் அளக்கலாகாத பொருள்கள் விளைகின் றன. ஆசிரியரிடத்தில் உள்ள பொருள்களும் அப் படியே இருக்க வேண்டும். இவரிடம் உள்ள சரக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/138&oldid=1286025" இலிருந்து மீள்விக்கப்பட்டது