பக்கம்:கன்னித் தமிழ்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

கன்னித் தமிழ்


விட்டால் என்ன பிரயோசனம்? காலத்துக்கு ஏற்றபடி போதன முறைகள் மாறும்; உதாரணங்கள் மாறும்; கொள்கைகள் மாறும்; இலக்கணமே மாறும். இவற்றை யெல்லாம் உணர்வதற்குப் பழைய நூலறிவு மாத்திரம் போதாது. உலகமே ஒரு பெரிய புத்தகம். அதை உணராவிட்டால் வாத்தியார் படித்த புத்தகங்கள் அவ்வளவும் பயன்படாமற் போய்விடும். ஆகையால் எல்லாவற்றையும் சொல்லிவிட்டுக் கடைசியில் உலகிய லறிவு வேண்டுமென்று விதிக்கிறார்கள்.

வாத்தியார் ஐயா எப்படி இருக்க வேண்டும் என்பதைச் சுருக்கமாக ஞாபகப்படுத்திக் கொள்ள இதோ இலக்கணச் சூத்திரம் இருக்கிறது.

குலன், அருள், தெய்வம் கொள்கை, மேன்மை, கல்பயில் தெளிவு, கட்டுரை வன்மை

நிலம்மலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும், உலகியல் அறிவோடு உயர்குணம் இனேயவும் அமைபவன் நூல்உரை ஆசிரி யன்னே. (கிறைகோல் - தராசு மாட்சி - பெருமை. இணையஇத்தகையவை.)

5

வாத்தியார் ஐயா எப்படி இருக்கவேண்டும் என்று சொல்லுவதோடு நில்லாமல் இலக்கணம் எழுதினவர்கள், ‘எப்படி இருக்கக் கூடாது?’ என் றும் கூறுகிறார்கள். அப்படிச் சொல்லும்பொழுதும் கெட்ட வாத்தியாரின் குணங்களையும் தொழில்களையும் சொல்லிவிட்டு, உபமானங்களின் மூலமாகவும் பொல் லாத வாத்தியார்கள் இப்படி இருப்பார்கள் என்று தெரிவிக்கிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/144&oldid=1286028" இலிருந்து மீள்விக்கப்பட்டது