பக்கம்:கன்னித் தமிழ்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

கன்னித் தமிழ்


பையனே ஆசிரியரைவிடச் சில சமயங்களில் அறிவுத் திறன் உடையவனுக இருக்கும்படி நேர்ந்துவிட்டால் பொருமைக் குணமுள்ள ஆசிரியர் சும்மா இருப்பாரா? ஆபத்து வந்துவிடும். அதுமட்டும் அல்ல. உலகத்தில் எத்தனையோ ஆசிரியர்கள் இருக்கிறார்கள். எல்லோ ரும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல. ஏற்றத் தாழ்வு இருப்பது இயல்பு. தம்மைவிடக் கல்வி யறிவிலோ, பொருள் நிலையிலோ உயர்வையுடைய ஆசிரியர் ஒருவர் பக்கத்தில் வாழ்பவராகவோ, அடுத்த வீட்டுப் பையனுக்குச் சொல்லிக் கொடுப்பவராகவோ இருந்து விட்டால் பொருமைக்கார வாத்தியார் ஐயா என்ன செய்வார், தெரியுமா? தினந்தோறும் அவரைப் பற்றிக் குறை கூறுவார்; பாடம் பாதி நேரம் நடந் தால், அவனுக்கு என்ன தெரியும்? சுத்த முட்டாள். அவனிடம் வாசிக்கிறவன் உருப்பட்டாற் போலத் தான்!” என்ற பாடம் பாதி நேரத்தைக் கபளிகரித்து விடும். பையன் படிப்புக் கெட்டுப் போவதோடுகூட, வாத்தியார் ஐயா சொன்ன சமாசாரங்களைப் பலர் காதில் விழும்படி செய்யும் ஊக்கம் அவனுக்கு உண் டாகிவிடும். அதன் பயன் வீண் கலகமும் மனஸ் தாபமுமே. -

வாத்தியாருக்குப் பேராசை கூடாது. மானுக்கன் பெரிய செல்வனுக இருக்கலாம். அவன் வாத்தியார் ஐயாவிடம் தாகை மதிப்பு வைத்து எது வேண்டு மானுலும் தரலாம். அவன் கொடுப்பதைப் பெறுவது தான் நல்லது. அவன் சொத்திலே தமக்கும் ஒரு பங்கு உண்டென்று உரிமை பாராட்டுபவரைப் போலச் சில ஆசிரியர்கள் பேசுவார்கள். எனக்கு நூறு ரூபாய் தரக் கூடாதோ? இவனுக்குப் பணமா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/146&oldid=1286029" இலிருந்து மீள்விக்கப்பட்டது