பக்கம்:கன்னித் தமிழ்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாத்தியார் ஐயா 14?

இயற்கையின் சார்பினுல் சோர்வோ, துன்பமோ இல்லாத காலம் நன்மை பயக்கும். சந்தையிரைச்ச லுள்ள இடத்திற்கு நடுவே பள்ளிக்கூடம் இருக்க லாமா? கல்விக்கு மன ஒருமைப்பாடு அவசியம். கடவுளைக் கும்பிடும் கோயில் நல்ல இடத்தில் அமைந் திருப்பதைப்போலக் கல்விச் சாலையும் நல்ல இடத்தில் இருக்க வேண்டும். நல்ல இடத்தைத் தேர்ந்தெடுப் பது அந்தக் காலத்தில் வாத்தியார் கடமை. ~

பழங்காலத்து வாத்தியார் ஐயா பாடம் சொல்லத் தொடங்குகிறார்.

நல்ல ஆசனத்தில் அமர்கிறார். கடவுளுக்கு முத லில் ஆசனத்தைச் சமர்ப்பிக்கிருேம் அல்லவா? பிறகு அவர் தெய்வத்தைத் தியானித்துக் கொள்கிறார். தமக்கும் பிறருக்கும் நல்ல பயனை உண்டாக்கும் ஒரு கைங்கரியத்தைத் தொடங்குபவர் கிரமமாகத் தெய்வ வணக்கத்தோடு ஆரம்பிப்பதுதானே நல்லது?

பாடம் சொல்லும்போது எந்தப் பொருளைப் பற்றிச் சொல்லப் போகிருேம், எப்படிச் சொல்ல வேண்டும் என்று வாத்தியார் ஐயா திட்டம் பண்ணிக் கொள்வார். சொல்லுகிற விஷயம், முறை இந்த இரண்டையும் இக்காலத்தில் கூட வாத்தியார்கள் மேலதிகாரிக்குக் காட்டுவதற்காக எழுதிவைத்துக் கொள்கிறார்கள். உரைக்கவேண்டிய பொரு 2ள உள்ளத்தில் அமைத்துக்கொண்டு பாடம் சொல்ல ஆரம்பிப்பார். அவருக்கு அதில் சந்தேகம் இராது; அதனுல் விடுவிடுவென்று சொல்லிக்கொண்டு போக லாம். அப்படிச் செய்தால் மானுக்கர்களுக்குப் புரிவது அரிது, ஆகையால் விசையாமல் பாடம் சொல்வார். மாணுக்கர்களெல்லாம் ஒரே மாதிரியான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/155&oldid=612832" இலிருந்து மீள்விக்கப்பட்டது