பக்கம்:கன்னித் தமிழ்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

கன்னித் தமிழ்


அறிவு படைத்தவர்களாக இருக்கமாட்டார்கள். சிலர் தீவிரமான அறிவுடையவர்களாக இருக்கக் கூடும்; சிலச் சற்று மந்தமாக இருக்கலாம். பாடம் சொன்ன வுடன் கிரகிக்கவில்லையே என்று வாத்தியார் ஐயா கோபித்துக் கொள்ள மாட்டார். பாடம் சொல்வதிலே அவருக்கு ஒர் இன்பம் உண்டு. ஆகையால் விருப்பத் தோடு சொல்வார். மலரைப் போன்ற பண்புடைய அவர் பாடம் சொல்லுகையில் அவரது முகம் மலர்ச்சி யாக இருக்கும். பாடம் கேட்கிறவன் எப்படி விஷயத் தை ஏற்றுக் கொள்கிருன் என்பதை ஆசிரியர் நன்றாகக் கவனிப்பார். அவன் தகுதிக்கு ஏற்றபடி, அவனுக்கு எப்படிச் சொன்னல் விளங்கும் என்பதை யோசித்துப் பாடம் சொல்வார். அவன் சக்திக்கு எவ்வளவு சொல் லித் தந்தால் போதுமோ அந்த அளவையும் தெரிந்து, அவன் உள்ளம் கொள்ளும்படி சொல்வார். சொல் லும்போது மனம் கோணுமல் நடுநிலையில் நின்று வித்தியாதானமாகிய தொண்டைச் செய்து வாழ்வார்.

இவற்றையெல்லாம் சேர்த்து ஒரு சூத்திரம் சொல்லுகிறது.

ஈதல் இயல்பே இயம்புங் காலக் காலமும் இடனும் வாலிதின் நோக்கிச் சிறந்துழி இருந்துதன் தெய்வம் வாழ்த்தி உரைக்கப் படும்பொருள் உள்ளத்து அமைத்து விரையான் வெகுளான் விரும்பி முகம்மலர்ந்து கொள்வோன் கொள் வகை அறிந்து அவன் உளங்கொளக் கோட்டமில் மனத்தின்நூல் கொடுத்தல் என்ப.

(ஈதல் - பாடம் சொல்லுதல். வாலிதின் - கன்றாக. சிறந்துழி சிறந்த இடத்தில். கொள்வோன மாளுக் கன். கோட்டம் பட்சபாதம். மனத்தின் - மனத்தோடு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/156&oldid=1286034" இலிருந்து மீள்விக்கப்பட்டது