பக்கம்:கன்னித் தமிழ்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

கன்னித் தமிழ்


ஐப்பசி கார்த்திகை மாதமாகிய கூதிர்ப் பருவத் தில் மழையும் குளிரும் மனிதனை வெளியிலே புறப்பட வொட்டாமற் செய்கின்றன; வானம் முழுவதும் மேகப் படலங்கள் நிறைந்துள்ளன; கதிரவனுடைய தரிசனம் கிடைப்பது மிக அரிதாக இருக்கிறது. வீட்டிலே உள்ள மகளிர் மாலைக் காலத்தில் விளக்கேற்றுதல் வழக்கம். திருமகள் விலாசத்தைத் தருவதற் கேற்ற அக் கடமையை அவர்கள் குறைவின்றிச் செய்வார் கள். மாலைக் காலம் வந்ததும் வராததும் அவர்களுக்கு எப்படித் தெரியும்? கடிகாரமா வீடுதோறும் இருக் கிறது ? சிறிது நேரத்துக்கு முன் அவர்கள் தம் வீட்டிற்கு அயலில் உள்ள பிச்சியின் அரும்புகளைப் பறித்துப் பூந்தட்டிலே இட்டு வைத்திருக்கிறார்கள். அவை திடீரென்று மலர்ந்து மணங் கமழ்கின்றன. அது கண்ட மகளிர், ‘ஆ மாலைக் காலம் வந்து விட்டது’ என்ற மகிழ்ச்சியுடன் திருவிளக்கேற்றித் தெய்வம் தொழுகின்றனர். இந்தக் காட்சியை நெடுநல்வாட்ை, - . . . . .

மடவரல் மகளிர் பிடகைப் பெய்த செவ்வி அரும்பின் பைங்காற் பித்திகத்து

அவ்விதழ் அவிழ்பதம் கமழப் பொழுதறிந்து இரும்புசெய் விளக்கின் ஈர்ந்திரிக் கொளி.இ நெல்லும் மலரும் தூஉய்க்கை தொழுது மல்லல் ஆவணம் மால் அயரt

  • மென்மையை உடைய பெண்கள் பூந்தட்டிலே வைத்த, பக்ரு வத்தை உடைய அரும்பையுடைய பசிய காம்பை உடைய பீச்சியின் அழகிய இதழ்கள் மலரும் பருவத்திலே மணம் வீச, அதல்ை பொழுதை உணர்ந்து, இரும்பினுல் செய்த விளக்கில் எண்ணெயால் ஈரமான திரி யைக் கொளுத்தி, தெல்லும் மலரும் து விக் கைதொழுது வணங்கி, வளப்பம் மிக்க கடை வீதியில் மாலைப் பொழுதைக் கொண்டாட.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/162&oldid=1286036" இலிருந்து மீள்விக்கப்பட்டது