பக்கம்:கன்னித் தமிழ்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழுதும் போதும் 155.

என்ற பகுதியால் நமக்குக் காட்டுகின்றது. பிச்சிப் போது மாலைப் போதை அறிவிக்கும். கடிகாரமாக உதவுதலை இந்த நிகழ்ச்சியால் அறிகின்றாேம்.

போதுதெரி யாமையிற் குமுதமொடு சதவிதழ்ப் போதுமே இருபோதையும் தெரிக்கும் தடம்பணே உடுத்ததமிழ் வேளுர

(முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ்) என்பதில் போது போதைத் தெரிவிக்கும் தன்மை எவ்வளவு அழகாகக் கூறப்படுகின்றது!

தமிழ் நூல்களில் கண்ட மலர்க் கடிகாரத்தை ஆராய்கையில், தாமரை மலர் தன் நாயகனுகிய கதிரவன் எழும்போது தன் இதழ்க் கதவம் திறப் பதைக் காண்கிருேம். நெய்தற் பூ வைகறையிலே மலர்கின்றது; வைகறை கட்கமழ் நெய்தல் ஊதி” என்பது திருமுருகாற்றுப்பட்ை. கதிரவன் செல்லும் திசையையே நோக்கி நிற்கும் சூரிய காந்தியை நாம் அறிவோம்; அதைப் போன்ற மற்றாெரு சிறு மலரும் இருப்பதைத் தமிழ் இலக்கியங்களில் காணலாம். பலர் தினந்தோறும் நெருஞ்சி மலரைப் பார்க்கின் றனர்; காலால் மிதித்தும் செல்கின்றனர். ஆனல், அது கதிரவன் உள்ள திசையை நோக்கியே தன் இதழ்களை விரித்து நிற்கு மென்பதை அறிபவர் அரியர்; - - - -

நெருஞ்சிப் பசல் வான்பூ - ஏர்தரு சுடரி னெதிர்தத் தாங்கு (புறநானூறு) சுடரொடு, திரிதரும் நெருஞ்சி (அகநானூறு) என்பவை இவ்வுண்மையை நமக்குத் தெரிவிக்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/163&oldid=612860" இலிருந்து மீள்விக்கப்பட்டது