பக்கம்:கன்னித் தமிழ்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழுதும் போதும் 159

பருவம் வந்ததென்று அறிந்து மணம் புரிவர்; மன நாளைப் புலப்படுத்தும் கணியின் (சோதிடனின்) தன்மை அவ் வேங்கை மரத்தினிடம் இருப்பதால் அதனைக் கணிவேங்கை யென்று வழங்குவர். மலர்களைக் கொண்டு காலத்தை அறியும் இம்மரபு நீலகிரியில் வாழும் தொதுவரிடத்திலும் உண்டு. மலையிலே வளரும் குறிஞ்சியின் மலர் பன்னிரண்டு ஆண்டு களுக்கு ஒரு முறை மலருமென்றும், அங்ஙனம் மலரும் காலத்தை அளவாகக் கொண்டு அத்தொதுவர் தம் ஆயுளைக் கணக்கிட்டுக் கொள்வரென்றும் கூறுவர்.

இங்ஙனம், மலர்கள் போதையும் நாளையும் காட்டும் திறத்தைத் தமிழ் நூல்களின் வாயிலாக ஆராய ஆராய, பல அரிய செய்திகளும் அவற்றை நமக்கு வழங்கும் புலவர் பெருமக்களின் நுண்ணறி :வும் மேன்மேலும் புலனுகி இன்பத்தையும் வியப்பையும் விளைவிக்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/167&oldid=612872" இலிருந்து மீள்விக்கப்பட்டது