பக்கம்:கன்னித் தமிழ்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெயர் வைத்தவர் யார் ? 9

ஆராய்ச்சிக்காரர்கள் சொல்கிறார்கள். திராவிடம் என்ற பேரே மாறித் தமிழ் என்று ஆயிற்றாம்!

வடமொழி நூல்களிலும் வேறுமொழி நூல் களிலும் தமிழைத் திராவிடமென்று குறித்திருக்கிறார் கள். அதைக் கொண்டு ஆராய்ச்சிக்காரர்கள் யோசித் தார்கள். இந்த ஆராய்ச்சியிலே முதலில் ஈடுபட்டவர் கள் வெள்ளைக்காரர்கள். அநேகமாக இத்தகைய ஆராய்ச்சியில், மரபு தெரியாமல் அவர்கள் சொல்லி வைத்த சில விஷயங்களைக் குரங்குப் பிடியாய்ப் பிடித்துக் கொண்டு அவற்றின்மேல் கட்டிடங்களைக் கட்டி நிலைநிறுத்தப் பார்ப்பவர்கள் பலர். திராவிடமென்னும் சொல்தான் தமிழ் என்று ஆகியிருக்க வேண்டுமென்று முன்னல் தீர்மானித்துக் கொண்டார்கள். வடமொழி யில் சில இடங்களில் ள என்ற எழுத்தும் ட என்ற எழுத்தும் ஒன்றுக்குப் பதில் ஒன்று வரும். த்ராவிடம் என்பது த்ராவிளம் என்று மாறிற்றாம். வ என்பது ம ஆக மாறுவதும் உண்டு. த்ராவிளம் த்ரவிளம் ஆகிப் பிறகு த்ரமிளம் ஆகி, அதன் பிறகு தமிளம் ஆகிவிட்டது. அது பிறகு தமிள் என்றும், அப்பால் தமிழ் என்றும் மாறி வந்து விட்டதாம்!

இங்கிலீஷ்காரன் ஒற்றைக் கல் மன்று என்ற பெயர் வாயில் நுழையாம்ல் ஊட்டக்க மந்த்’ என்று பேசினன். அப்படியே வழங்கின்ை. அது பின்னும் மாறி உதகமண்டலம்’ ஆகிவிட்டது. இது எப்படி வந்தது என்று வெறும் வார்த்தையைக் கொண்டு ஆராய்ச்சி செய்யப் புகுந்தார் ஒருவர். மேகங்கள் தவழ்ந்து நீர் நிறைந்த பரப்பு ஆகையால் உதகமண் டலம் என்ற பெயர் வந்தது” என்று முடிவு கட்டினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/17&oldid=612882" இலிருந்து மீள்விக்கப்பட்டது