பக்கம்:கன்னித் தமிழ்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

கன்னித் தமிழ்


தார். அது முதல் பூரான்கள் ஒரு தாய்க்கு ஒரு பிள்ளையாகவே இருந்து வருகின்றன. ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை என்றால் அந்தப் பிள்ளைக்கு ஒரு கெடு தலும் செய்யக்கூடாது. அது பாவம்’ என்று கதையை முடித்தாள்.

ஒரு தாய்க்கு ஒரு பிள்ளையென்று பூரானிடத் திலேயே இரக்கம் காட்டவேண்டுமானல் மனித சாதி யின் திறத்தில் எத்தனை பரிவு உண்டாகவேண்டும்! உண்மையில் ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை என்றாலே நமக்கு இரக்கம் உண்டாகத்தான் உண்டாகிறது.

பிறர் தம்மிடம் இரக்கம் காட்டவேண்டுமென்று எதிர்பார்க்கிறவர்கள், ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை ஐயா!’ என்று சொல்லி அந்த இரக்கத்தைப் பெறு கிறார்கள். இதை உலக வாழ்க்கையில் பார்ப்பதோடு இலக்கியங்களிலும் காணலாம்.

ஒரு தாய்க்கு ஒரு பிள்ளையென்றால், அது ஆண் பிள்ளையானுலும் சரி, பெண்பிள்ளையானுலும் சரி, பெற்றவர்களுக்கு அருமைப் பிள்ளைதானே?

ஒரு தலைவன் சில காலம் தன்னுடைய மனை வியைப் பிரிந்து வேறு ஒருத்தியோடு தங்கின்ை. அப்படித் தங்கிவிட்டு மறுபடியும் தன் மனைவியிடம் வந்தான். அவன் மனைவிக்குத் தோழி ஒருத்தி இருந் தாள். அவள் அவனுடைய தவருண செயலை எடுத் துச் சொன்னுள். அவன் தான் தவறே செய்யவில்லை என்று சொல்லித் திருப்பரங்குன்றத்தின்மேல் ஆணை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/176&oldid=1286042" இலிருந்து மீள்விக்கப்பட்டது