பக்கம்:கன்னித் தமிழ்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு தாய்க்கு ஒரு பிள்ளே . 169

யிட்டான். அந்த ஆணையில்ை பொய்யனுகிய அவ னுக்கு ஏதேனும் துன்பம் வந்தால் அவன் மனைவி உயிர் விடுவாள். ஆதலால் அவளை நினைத்தாவது அவன் ஆணையிடுவதைத் தடுக்க எண்ணினுள் தோழி. அவளுக்குக் கோபம் வந்துவிட்டது. பெரியவர்களுக் குப் பிறந்த அயோக்கியனே! நீ ஆணையிடாதே. அத ல்ை இவளுக்குத் துன்பம் உண்டாகும். இவள் ஒரு தாய்க்கு ஒரு பெண்பிள்ளை’ என்று கூறுகிருள்.

சான்றாளர் ஈன்ற தகாஅத் தகாஅமகான், ஈன்றாட்கு ஒருபெண் இவள்.

“சான்றாண்மையுடையோர் பெற்ற, மிகத்தகுதி இல் லாத மகனே! இவளைப் பெற்றவளுக்கு இவள் ஒரு பெண்’ என்பது இதன் பொருள். இது பரிபாடல் என்ற சங்க நூலில் வரும் காட்சி. தோழி தலைவனு டைய உள்ளத்தில் இரக்கம் தோன்றும்படி செய்ய, “ஈன்றாட்கு ஒரு பெண் இவள்” என்று சொல்கிருள்.

கட்டிளங் காளை ஒருவனும் அழகி ஒருத்தியும் ஒருவரை ஒருவர் காதலித்து அளவளாவினர். அவர்க ஞடைய காதல் யாருக்கும் புலப்படாமல் இருந்தது. காதலன் காதலியை மணம் செய்து கொள்ள விரும்பி ன்ை. ஆனல் அதற்குக் காதலியைப் பெற்றவர்கள் இணக்கமாக இருப்பார்கள் என்று தோன்றவில்லை. ‘இனி இவளை இங்கே விட்டுவைக்கக் கூடாது’ என்று தீர்மானித்த காதலன் அவளை யாரும் அறியாத படி அழைத்துக்கொண்டு தன் ஊருக்குச் சென்று விட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/177&oldid=612906" இலிருந்து மீள்விக்கப்பட்டது