பக்கம்:கன்னித் தமிழ்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

கன்னித் தமிழ்


அவள் இரங்குவதற்கும் அவள்பால் மற்றவர்கள் இரக்கம் காட்டுவதற்கும் உரிய தலைமையான காரணம், பிரிந்து சென்ற பெண் ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை என்பது. அதைத் தாய் முதலிலேயே, ‘ஒரு மகள் உடையேன் மன்னே!’ என்று சொல்லி அறிவுடை யோர் நெஞ்சில் கருணை ததும்பச் செய்கிருள். இது நற்றிணையில் வரும் பாட்டு.

பெரியாழ்வார் கண்ணபிரானைப் பற்றிப் பாடிய பாடலில் ஓரிடம் வருகிறது. தாய் தன் பெண்ணைப் பிரிந்து வருந்துகிருள். செங்கண்மால் அவளை அழைத்துச் சென்றுவிட்டான். ‘அவளைத் திருமகளைப் போல வளர்த்தேன். உலகமெல்லாம் அவள் அழ கையும் குணத்தையும் பார்த்துப் புகழ்ந்தது. அவளைச் செங்கண்மால் கொண்டுபோனன். யசோதை தன் மருமகளாகிய இவளைக் கண்டு மனமகிழ்ந்து இவளுக்கு வேண்டிய சிறப்புக்களையெல்லாம் செய்வாளோ! அவ ளும் பெரிய குடும்பத்தில் வாழ்ந்து, பெரிய பிள்ளை யைப் பெற்றவள் ஆயிற்றே!’ என்று தாய் வருந்து கிருள். இப்படி வருந்தும்போது அவள் முதலில் சொல் வது என்ன தெரியுமா? “எனக்கு நாலைந்து பெண் களா இருக்கிறார்கள்? ஒரு பெண்தான். அவளைத் திரு மால் கொண்டுபோனன்’ என்று புலம்புகிருள்.

ஒருமகள் தன்னே உடையேன்;

உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல வளர்த்தேன்;

செங்கண்மால் தான்கொண்டு போனன்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/180&oldid=1286044" இலிருந்து மீள்விக்கப்பட்டது