பக்கம்:கன்னித் தமிழ்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

கன்னித் தமிழ்


அவன் ஒருவன்தான் உண்டு. அந்த வீட்டில் வேறு ஆணே இல்லையா? இப்போது இல்லை. முன்பு இருந் தார்கள். இவளுக்கு அண்ணன் இருந்தான். சில ஆண்டு களுக்கு முன்பு அவன் ஒரு போரில் படை வீரனுகச் சென்றன். அங்கே தன் உயிரைக் கொடுத்தான். சமீ பத்தில் நடைபெற்ற போரில் இவள் கணவன் உயிர் துறந்தான். இப்போது போர் மூளும் போல இருக் கிறது. - - போர் மூண்டால் ஆடவர் தினவுகொண்ட தோள் துடிப்பது பெரிது அன்று. பெண்களுக்கே வீர உணர்ச்சி உண்டாகிவிடும்; வீட்டில் உள்ள ஆடவர் களைப் போருக்கு அனுப்புவதில் முனைவார்கள். “என் தமையன் போர் வீரன்’ என்று சொல்லிக் கொள் வதில் அவர்களுக்கு அளவற்ற பெருமை. . .

இதோ போர்ப்பறை கேட்கிறது. இவள் காதில் விழுகிறது. இவள் தன்னுடைய ஒரே மகனைப் பார்க் கிருள். அவனை அழைத்து முதலில் அவன் கையில் வேலைத் கொடுக்கிருள். “போ சண்டைக்கு” என்கிருள். பிறகுதான் அவனைப் பார்க்கிருள். தலை மயிர் பறக்கிறது. இடுப்பில் நல்ல வேட்டியில்லை. அவசர அவசரமாகத் தலையில் எண்ணெயைத் தடவி வாருகிருள். வெள்ளை வேட்டியை விரித்து உடுத்து கிருள். போர்க்களத்துக்குப் போய் வெற்றியோடு வா’ என்று அனுப்புகிருள்.

இவளுடைய துணிவுதான் என்ன! இத்தகைய வீரப் பெண்டிரை மூதில் மகளிர் என்று பழம் புலவர்கள் சொல்வார்கள். ‘இவளுடைய துணிவை நெஞ்சம் நினைக்கப் பயப்படுகிறதே கெடுக இந்தச் சிந்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/182&oldid=1286045" இலிருந்து மீள்விக்கப்பட்டது