பக்கம்:கன்னித் தமிழ்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு காய்க்கு ஒரு பிள்ளை 175

எவ்வளவு கடுமையான துணிவு இவளுக்கு இவள் வீரக்குடியில் உதித்தவள் என்பது தகும் தகும். அன்று ஒருநாள் எழுந்த போரில் இவள் தமையன் யானையை வெட்டி வீழ்த்திப் போர்க்களத்தில் இறந்தான். நேற்று உண்டாயிற்று ஒரு சண்டை; அதில் இவள் கணவன் பெரிய பசுக்கூட்டத்தைப் பகைவர் கொண்டு போகாமல் தடுத்தான்; அங்கேயே உயிரை நீத்தான். இன்றைக்கோ, போர்ப்பறை காதில் பட்டதுதான் தாமதம். அந்த ஒலி கேட்டதிலே ஒரு மகிழ்ச்சி. ஆனல் அடுத்த கணத்தில், அடாடா, யாரை அனுப்புவது?’ என்ற மயக்கம். அதுவும் மறு கண்த்திலே போய்விட்டது. ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை: அவனை அழைத்தாள்; வேலைக் கையிலே கொடுத் தாள்; வெள்ளை வேட்டியை விரித்து உடுத்தாள்; பரட்டைத் தலையிலே எண்ணெயைத் தடவி , வாரினுள்; போர்க்களத்தைப் பார்த்துப் போ என்று அனுப்புகிருளே!” என்று கண்டவர் ஆச்சரியப் படுவதாகப் புலவர் பாடுகிறார்,

கெடுக சிந்தை கடிது இவள் துணிவே! மூதில் மகளிர் ஆதல் தகுமே. மேளுள் உற்ற செருவிற்கு இவள்தன்னை யானே எறிந்து களத்துஒழிந் தனனே; நெருநல் உற்ற செருவிற்கு இவள்கொழுநன் பெருநிரை விலங்கி ஆண்டுப் பட்டனனே; இன்றும், செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி வேல்கைக் கொடுத்து வெளிதுவிரித்து உடீஇப் பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி ஒருமகன் அல்லது இல்லோள் 筠。 செருமுகம் நோக்கிச் செல்கென விடுமே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/183&oldid=612926" இலிருந்து மீள்விக்கப்பட்டது