பக்கம்:கன்னித் தமிழ்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

கன்னித் தமிழ்

.

(மூதில் மகளிர் - முதிய வீரக் குடியில் பிறந்த பெண்டிர். செரு - போர். தன்னை - தமையன். எறிந்து - கொன்று. களத்து - போர்க்களத்தில். கெருகல் - நேற்று. கிரை - பசுக்கூட்டம். விலங்கி - தடுத்து. பட்டனன் - இறந்தான். செருப்பறை போர்முரசு. வெளிது-வெள்ளே வேட்டி உடீஇ - உடுத்து. பாறு மயிர் - விரிந்த மயிர். செருமுகம் - போர்க்களம்.)

“ஒரு மகன் அல்லது இல்லோள்” என்பது அந்த மறமகளுடைய சிந்தைத் துணிவை எடுத்துக் காட்டுகிறது.

திருவாரூரில் வாழ்ந்து அரசு செலுத்திய மனு நீதிச்சோழன் வரலாறு தமிழ்நாடு நன்கு அறிந்தது. ஒரு கன்றுக்குட்டியின்மேல் தேரை விட்டு அது இறக் கும்படி செய்ததற்காகத் தன் மகனையே தேர்க்காலில் இட்டு அந்தக் குற்றத்துக்குத் தண்டனை விதிக்க எண்ணிய செம்மையாளன் அவன். அந்த மன்னன்

جانج،سندہندنبرامِ مّرہ:مہینو، ہم%ئ5oxo

தன் மகனைக் கீழே கிடத்தி அவன்மேல் தேரை

ஊர்ந்த அருமைச் செயலைப் பாடுகிறார் சேக்கிழார்.

‘நெடுங்காலமாக இடையருது வரும் சோழர் குலத்திற் பிறந்த பிள்ளை. அவன். மனுநீதிச் சோழனுக்கு ஒரே பிள்ளை. இதனைச் சிறிதும் கவனி யாமல், அறம் திறம்பக் கூடாது என்ற ஒரே கருத் தைக் கொண்டு மனுவேந்தன் தன் மைந்தனுடைய மார்பின்மேல் தேரை ஓட்டினன். அவனுடைய அர. சாட்சியின் அருமைதான் என்னே! என்ற பொருள்

ாடுகிறார்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/184&oldid=1286046" இலிருந்து மீள்விக்கப்பட்டது