பக்கம்:கன்னித் தமிழ்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு தாய்க்கு ஒரு பிள்ளே f7?

ஒருமைந்தன் தன்குலத்துக்கு

உள்ளான்என் பதும்.உணரான்; தருமம்தன் வழிச்செல்கை

கடன்என்று தன்மைந்தன் மருமந்தன் தேர்ஆழி

உறஊர்ந்தான்; மனுவேந்தன் அருமந்த அரசாட்சி

அரிதோமற்று எளிதோத்ான்?

அவன் ஒரு பிள்ளை என்பதை எடுத்தவுடனே சொல்கிறார். அப்படியிருந்தும் அதனை ஒ ராம ல் அவன்மேல் மனுவேந்தன் தன் தேரை விட்டான் என்று சொல்லுவதில், அவ் வேந்தனுடைய நீதி முறையின் சிறப்புப் புலப்படுகிறது. அவன் அரு மந்த மைந்தன்தான், ஒரே பிள்ளையாகையால்; ஆனல் அவனைக்காட்டிலும் அருமையானது தருமம். தன் மகனை அழிக்கலாம்; தருமத்தை அழிக்கக்கூடாது. அவன் தேர்க்காலில் ஊர்ந்தவன் சொந்தப் பிள்ளை என்று சொன்னுல் போதாது; அவனுக்கு ஒரே பிள்ளை என்று சொன்னலும் போதாது; அந்தக் குலத்துக்கே ஒரு பிள்ளை என்று சொல்லி, அவனையும் தியாகம் செய்யத் துணிந்தான் மனு வேந்தன் என்று புலப்படுத்துகிறார் சேக்கிழார்.

திருவிளையாடற் புராணத்திலும் ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை ஒருத்தன் வருகிருன். சோம சுந்தரக் கடவுள் செய்த அறுபத்து நான்கு திருவிளையாடல் களில் மாமனுக வந்து வழக்குரைத்தது.ஒன்று. தன பதி_என்ற வணிகர் தலைவன் தன்-தங்கையின்

12 .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/185&oldid=612933" இலிருந்து மீள்விக்கப்பட்டது