பக்கம்:கன்னித் தமிழ்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

கன்னித் தமிழ்

மகனைத் தன் பிள்ளையாகக் கொண்டு வளர்த்து வந் தான். பிறகு தன் சொத்தை யெல்லாம் அவனுக்குக் கொடுத்துவிட்டுத் தவம் புரியப் போய்விட்டான். அவன் போனவுடன் அவனுடைய தாயாதிகள் அந்தச் சொத்தை வெளவிக்கெண்டு அந்த இளங் குழந்தையைப் பரிதவிக்கும்படி விட்டு விட்டார்கள். அந்தக் குழந்தையின் தாயும், தனபதியின் தங்கையு மாகிய மாது சோமசுந்தரக் கடவுளிடம் முறையிட்டுக் கொண்டாள். இறைவர் கட்டளைப்படி நியாய சபை யில் தன் வழக்கை எடுத்துச் சொன்னாள். அப்போது சோமசுந்தரக் கடவுள் தனபதியைப் போன்ற உருவம் தாங்கி வந்து, நீதிபதிகளின் முன்பு வழக்குரைத்து மீட்டும் அந்தக் குழந்தைக்குச் சொத்துக்களை வாங்கித் தந்தார். இதுவே அந்தத் திருவிளையாடல்.

பையனுடைய தாய் சோமசுந்தரக் கடவுளிடம் சென்று முறையிடுகிருள்.

“அருட்பெருங்கடலே, எங்கும் இருப்பவனுகிய நீ உண்மையை அறிய மாட்டாயா? எனக்கு யார் பற்றுக் கோடு? நானே பெண்பால். என் மகன் அறிவு நிரம் பாதவன்” என்றெல்லாம் சொல்லிப் புலம்புகிருள். அப்படிச் சொல்வதற்கு முன் எடுத்த எடுப்பில், “நான் ஒருத்தி.-ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை. இவன்’ என்று தொடங்குகிருள்.

ஒருத்திநான் ஒருத்திக்கு இந்த

ஒருமகன்; இவனும் தேறும் கருத்திலாச் சிறியன்; வேறு

கண்கணும் காணேன் ஐய!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/186&oldid=1286047" இலிருந்து மீள்விக்கப்பட்டது