பக்கம்:கன்னித் தமிழ்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெயர் வைத்தவர் யார்? I1.

லுக்கே தமிழ் நாடு என்ற பொருள் உண்டு. பழைய நூல்களில் அந்தப் பொருளில் புலவர்கள் வழங்கி யிருக்கிறார்கள்.

எப்படி ஆலுைம், தமிழ் என்னும் பெயரைத் தமிழ் நாட்டினரே வைத்து வழங்கி யிருக்கவேண்டுமே. யன்றிப் பிறர் சொல்ல, அதையே தமிழர் வழங்கின ரென்று சொல்வது முறையன்று.

jor

தமிழ் என்ற சொல்லைத் தமிழர்கள் ஆண்டு வந்: தார்கள். தமிழ் மொழியில் அவர்களுக்கிருந்த அன்பு அளவற்றது. தங்கள் மொழி இனியது என்று எண் னிப் பாராட்டி இன்புற்றார்கள். நாளடைவில் தமிழ் என்ற சொல்லுக்கே இனிமை என்ற பொருள் உண்டாயிற்று. ‘இனிமையும் நீர்மையும் தமிழ்எனல் ஆகும்’ என்று பிங்கல நிகண்டில் வருகிறது. இனிமை, ஒழுங்கான இயல்பு இரண்டையும் தமிழ் என்ற சொல் லால் குறிக்கும் வழக்கம்-ஏற்பட்டது. பெண்களின் வருணனை வரும் ஓர் இடத்தில் சீவக சிந்தாமணியின் ஆசிரியர், “தமிழ் தpஇய சாயலவர்’ என்று சொல்லு கிறார். இனிமை பொருந்திய சாயலையுடைய மகளிர்’ என்பது அதன் பொருள். கம்பரும் இனிமை யென்னும் பொருளில் தமிழ் என்னும் சொல்லை வழங்கியிருக்கிறார்.

- இப்படி அருமையாகப் போற்றும் அந்தச் சொல் தமிழர் வைத்த பெயர்தான். தமிழ் என்ற சொல்லில் வரும் ழகரம் மற்றவர்களுக்கு உச்சரிக்க வருவதில்லை. ஆகவே தமிழ் தமிளாகி, த்ரமிளம், த்ரவிடம் என்று பல அவதாரங்களை எடுத்தது என்று சொல்வதுதான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/19&oldid=612950" இலிருந்து மீள்விக்கப்பட்டது