பக்கம்:கன்னித் தமிழ்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

கன்னித் தமிழ்


ஒன்றும் இல்லை. அது ஒட ஒட அதன் வழி அடுத்த கணத்தில் மறைந்து கொண்டே வருகிறது. இந்தக் காட்சி தலைவனுக்கு நினைவு வந்தது.

பொருள், வாடாத பூவையுடைய பொய்கையின் நடுவில் ஒடும் மீன் செல்லும் வழியைப் போல விரைவில் அழிந்து போவதுதானே? எந்தப் பொரு ளாக இருந்தாலும் எல்லாம் நிலையாமற் போய்விடு பவைகளே. அந்தப் பொருளுக்காகவா இவளை விட்டுப் பிரிவது?” -

அவள் அமர்ந்து இனிது நோக்கிய நோக்கம், அவன் உள்ளத்தில் தண்மையைப் புகுத்தியது.

நான் சென்று ஈட்டிவரும் செல்வம் சிறிய அளவுடையதாகத்தான் இருக்கும். அது கிடக்கட்டும். கடல் சூழ்ந்த இந்த உலகத்தையே மரக்காலாக வைத்து ஏழு தடவை அளந்து உனக்குத் தருவேன். நீ உன் காதலியைப் பிரிந்து வா” என்று கடவுளே வந்து சொன்னலும் நான் இவளைப் பிரிய மாட்டேன். விழு நீர் சூழ்ந்த வியலகமாகிய உலகமே தூணியாக வைத்து ஏழு தடவை அளக்கும் விழு நிதி பெறினும், இவளுடைய கனங் குழையோடு அமர்த்த சேயரி மழைக் கண்ணில்ை அமர்ந்து இனிது நோக்கும் நோக்கத்தால் செகுக்கப்பட்டவ தைலால், அந்தப் பொருள் எத்தனை வகையாக இருந்தாலும் சரி, அது வாழட்டும்; எனக்கு வேண்டாம். இன்று என் கைப்பட்ட பெரிய நிதி இவள். இவளைப் பிரிதலைவிட வறுமையும் பிணியும் துயரமும் வேறு இல்லை. ஆகவே என் நெஞ்சே, நீ வீணுகச் சபலம் கொள்ளவேண்டாம். நீ வாழ்க! நீ நினைத்த பொருளும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/198&oldid=1286051" இலிருந்து மீள்விக்கப்பட்டது