பக்கம்:கன்னித் தமிழ்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

கன்னித் தமிழ்


யில் இதுகாறும் ஒருவரை ஒருவர் அறியாமல் சில ஆண்டுகள் வாழ்ந்தார்களே, அதுதான் அதிசயம். அவர்கள் பிரிவின்றி வாழப் பிறந்தவர்கள்.

காதலன் காதலியைச் சந்தித்துப் பிரிந்து செல் வான். அவளுேடு அளவளாவிய போதெல்லாம் இன் பம் கண்ட காதலி, அவன் பிரிந்தபோது எல்லை யில்லாத துன்பத்துக்கு ஆளாளுள். அவனைப் பிரிந் திருக்கும் நேரமெல்லாம் அவளுக்குத் தீயின்மேல் இருப்பதுபோல் இருந்தது. ஆம், அவள் பிரிவுத் தீயிலே வெதும்பிள்ை.

இது அவளுடைய ஆருயிர்த் தோழிக்குத் தெரிந் தது. காதலனைக் களவிலே சந்திக்கும் நேரம் சிறிது; அவனைப் பிரிந்து வாழும் நேரம் பெரிது. ஆகவே, காதலிக்குப் பிரிவில்ை வரும் துன்பமே பெரிதாக இருந்தது. . .

காதலன் காதலியைப் பிரியாமல் எப்போதும் உடன் உறைந்தால் அவளுக்குத் துன்பம் இராது. களவுக் காதல் புரிந்துவரும் அவர்கள் எப்போதும் ஒன்றுபட்டு இருக்க முடியுமா? ஆல்ை....ஆல்ை........ தோழி சிந்தனையில் ஆழ்ந்தாள். அந்த அழகன் தன் தலைவியை ஊரார் அறியத் திரு ம ன ம் செய்து கொண்டால் என்றும் பிரியாமல் வாழலாம். அவனுடைய வீட்டுக்கே சென்று உலகறியக் கணவன் மனைவியராக வாழ்ந்து இல்லறம் நடத்தலாம்.

இந்த எண்ணம் தோன்றியவுடன் தோழிக்கு ஆறுதல் பிறந்தது. அந்த இரண்டு காதலர்களையும் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்த வேண் டும் என்று தீர்மானித்துக்கொண்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/202&oldid=1286053" இலிருந்து மீள்விக்கப்பட்டது