பக்கம்:கன்னித் தமிழ்.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புன்னேயின் கதை 199

அவன் குணத்திற் சிறந்த தலைவன். கடற்கரை ஊருக்குத் தலைவன். வலம்புரிச் சங்கங்கள் முழங்கும் கடல் துறையை உடையவன். பாணர்கள் தம் யாழில் விளரிப்பண்ணை வாசித்தால் எப்படி இருக்குமோ, அப்படி இருக்கும் வலம்புரிச் சங்குகளின் முழக்கம்.” அத்தகைய உயர் நிலையில் உள்ள இந்தக் கட்டழகன் அறிவும் உணர்ச்சியும் உடையவன். அதல்ை தோழி யின் கூற்றை நன்றாகத் தெரிந்து கொண்டான். அதனூடே மறைந்திருக்கும் குறிப்பை அறிந்தான். ‘இந்த இடத்தை விட்டுவிட்டால் இனி இங்கே வேறு இடம் பார்ப்பது ஏன்? வலம்புரி முழங்கும் நம்முடைய கடற்கரை ஊருக்கே இவளைக் கொண்டு போய்விட லாம். களவாக அல்ல; கல்யாணம் செய்துகொண்டு, இவளுக்கு நான் கணவன் என்ற உரிமையோடு என் காதலியை அழைத்துச் செல்லலாம்’ என்ற எண்ணம் அவனுக்கு உண்டாகிவிட்டது.

அதைத்தானே தோழி விரும்பிள்ை? - தோழி தலைவனிடம் புன்னையக்காளைப் பற்றிச் சொன்னதை நற்றிணை என்ற சங்க நூலில் உள்ள பாட்டு ஒன்று நமக்குத் தெரிவிக்கிறது.

‘விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி

மறந்தனம் துறந்த காழ்முக அகைய, நெய்பெய் திம்பால் பெய்து இனிது வளர்ப்ப தும்மினும் சிறந்தது; துவ்வை ஆகும்’ என்று அன்னே கூறினள், புன்னேயது சிறப்பே. அம்ம! நானுதும், நும்மொடு நகையே. விருந்திற் பாணர் விளரிஇசை கடுப்ப வலம்புரி வான்கோடு தரலும் இலங்குநீர்த்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/207&oldid=613007" இலிருந்து மீள்விக்கப்பட்டது