பக்கம்:கன்னித் தமிழ்.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செவிலி கண்ட காட்சி

முயற்சியும் ஆற்றலும் அறிவும் கல்வியும் உடைய தமிழ் மகன் அவன். காதல் உள்ளம் சிறக்கும் காதலி ஒருத்தியைக் கண்டு மனம் ஒன்றிப் பின்பு உலகறிய மணம் செய்து கொண்டான். அழகும், அறிவும், காதலனது வருவாய்க்கு ஏற்ப இல்வாழ்க் கையை நடத்தும் நிறமையும் உடையவள் அவள். சில காலம் பொருள் தேடும் பொருட்டுப் பிரிந்து செல்வான் தலைவன். முன்னேர் ஈட்டிவைத்த செல்வத்தைக் கொண்டு வாழ்வதை வாழ்வாக எண்ணு தவன் அவன். தானே முயன்று பெற்ற பொருளைக் கொண்டு அறம் செய்து இன்பம் துய்க்க வேண்டு மென்ற கொள்கையை உடையவன். இதுதான் பழங்காலத்தில் தமிழ்நாட்டு ஆடவனது கொள்கை யாக இருந்தது. -

ஆகவே, அவன் காட்டைத் தாண்டியும் நாட்டைத் தாண்டியும் தன்மொழி பயிலாத பிறமொழி பயிலும் இடங்களுக்குச் சென்றும் பொருள் ஈட்டி வந்தான். சில சமயங்களில் திரைகடல் ஒடியும் திரவியம் கொணர்ந்தான். パ・× ....... 、2,. ........ - *

ஆள்வினையாகிய முயற்சி இல்லாதவனே. ஆடவ

னென்று சொல்வது தக்கதன்று. இல்வாழ்வுக்கு இன்றியமையாதது பொருள். அந்தப் பொருள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/209&oldid=613013" இலிருந்து மீள்விக்கப்பட்டது