பக்கம்:கன்னித் தமிழ்.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பர் முகந்தது 209

அடைக்கலப் படலம், 133) என்னும் பாடலில் உள்ள, ‘வெள்ளிவெண் கடலின் என்ற பகுதி யைக் கேட்ட புலவர் ஒருவர், இது சிந்தாமணிப் பிரயோகமாய் இருக்கிறது’ என்று சொல்லிய போது கம்பர், சிந்தாமணியிலிருந்து ஓர் அகப்பை முகந்து கொண்டேன்’ என்று விடை பகர்ந்தனர் என்பது பழைய பிரதி ஒன்றில் எழுதிய குறிப்பால் தெரிய வருகிறது’ என்பதே அச்செய்தி. இதல்ை, கம்பர் சிந்தாமணியால் பெற்ற பயன் இன்னதென்பது நன்கு தெரியவரும்.

ஒருவர், ‘உலகமே சுவைக்கவில்லை!” என்று சொல்கிறார்; ‘எந்தப் பொருள் எப்படிப் போனல் என்ன? சூரியன் எங்கே உதயமானல் என்ன?” என்று பேசுகிறார்; “உலக வாழ்க்கையில் இன்பம் காணும் முயற்சியே இனி வேண்டாம்’ என்றும் சொல்கிறார். அவர் இலக்கியத்தில் இன்பம் கண்டவர். இப்போது அதுகூட வேண்டாம் என்கிறார். நல்ல தமிழ்க் காப்பியங்களை ஆவலுடன் வாசித்தவர், அவர், அப்புலவர் அருமையாக எடுத்துக் கூறும் காவியங்கள் மூன்று; திருக்குறள் ஒன்று.

திருத்தக்க மாமுனிசிந் தரமணி கம்பர் விருத்தக் கவித்திறனும் வேண்டேம்-உருத்தக்க கொங்குவேள் மாக்கதையைக் கூறேம் குறள் அணுகேம் எங்கெழிலென் ஞாயி றெமக்கு?

என்பது அந்த இலக்கிய ரசிகர் கூற்று. என்ன காரணத்தாலோ ஒரு சமயத்தில் மனம் நைந்து இப் படிக் கூறிலுைம் அவர் கூற்றிலிருந்தே அவருக்குத் “கொங்குவேள் மாக்கதை - கொங்குவேளிர் இயற்றிய பெருங்கதை

14 - -- - ・ ・ ー ・・・ ・ - > ペ・・・

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/217&oldid=613042" இலிருந்து மீள்விக்கப்பட்டது