பக்கம்:கன்னித் தமிழ்.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பர் முகந்தது శిశితి

(எள் போட்டால் எள் நிலத்தில் விழாதபடி கூடி யிருந்த குறைவில்லாத பதினெட்டுப் பாஷைகளைப் பேசும் மக்களால், பல வகைப் பறவைகள் பழகுகிற ஆலமரத் தைப் போன்ற சிறப்பைப் பெற்றதும் எல்லேயற்ற வளத்தை உடையதுமாகிய நகரத்தின் இயல்பு இத்

தகையது.)

இந்த உவமையைக் கம்பர் எடுத்துக் கொண் டார். ஆல்ை, இதைத் திருப்பி உபமானத்தை உபமேயமாக்கினர். அதாவது, பதினெட்டு மொழிக் காரர் பேச்சுக்குப் பறவைகளின் ஒலியைத் தேவர் உவமை கூறினர்; கம்பர் பறவைகளின் ஒலிக்குப் பதினெட்டு மொழியினர் பேச்சை உவமை கூறி ஞர் பம்பைப் பொய்கையில் இன்னவென்று கான முடியாத பல ஒலிகளைச் சோர்வில்லாமல் ஒலிக்கின்றன பல புட்கள். ஆரியம் முதலிய பதினெண் மொழி பேசும் சாமானிய மக்கள் ஓரிடத்தில் கூடினுல் எப் படிச் சளசளவென்று பேசுவார்களோ அப்படி இருந் தது அந்த இரைச்சல்:

ஆரியம் முதலிய பதினெண் பாடையிற் பூரியர் ஒருவழிப் புகுந்த போன்றன ஒற்கில கிளவிகள் ஒன்றுெ டொப்பில சோர்வில விளம்புபுள் துவன்றுகின்றது. х (பூரியர் - பாமர மக்க ள். துவன்றுகின்றது - நெருங்கியுள்ளது.

நாலு பேர் கூடும் இடத்தில் தங்கள். தங்கள் பேச்சைச் சளசளவென்று பேசிக் கொள்பவர்கள் பாமர மக்களாகத்தான் இருக்கக்கூடும். ஆதலின், ‘அறிவற் றவர்.என்னும பொருள் படமாக்த்ள் என்று தேவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/231&oldid=613097" இலிருந்து மீள்விக்கப்பட்டது