பக்கம்:கன்னித் தமிழ்.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளவையார் என்னும் பண்புருவம் 329

புலமையைக் கண்டு யாவரும் அவரிடம் அளவற்ற அன்பும் பெரும்திப்பும் கொண்டிருந்தனர். முடிவை மன்னரும் தலைவணங்கும் தகுதி அவருக்கு இருந்தது.

பிற்காலத்தில் சிறந்த புலமையும் ஒழுக்கமும் தெய்வபக்தியும் உடைய பெண் பெரியார் ஒருவர் இருந்தார். அவருக்கும் ஒளவையார் என்ற பெயர் ஏற்பட்டது. நாடோடியாக வழங்கும் கதைகளில், “ஓர் ஊரில் ஓர் ஒளவையார்ப் பாட்டி இருந்தாள்’ என்று வரும் கதைகள் பல. ஒளவை வாக்கு, செவ்வை வாக்கு’ என்ற பழமொழியும் தமிழ்நாட்டில் வழங்கத் தொடங்கியது. - .

இவற்றை யெல்லாம் ஒன்று படுத்திச் சிந்தித் தால் ஒளவை என்ற மாத்திரத்தில் தமிழ் மக்களின் அகக் கண்ணில் ஒர் உருவம் புலனுவது தெரியவரும். ஒளவையார் முதுமையை உடையவர் என்பது முதல் அடையாளம்; அவர் பெருந்தமிழ்ப் புலமை உடையவர் என்பது அடுத்து நினைவுக்கு வருவது பக்தியுடை யவர் என்பது பிறகு நினைவிலே தோன்றுகிறது; சிறந்த ஒழுக்கம், எல்லோரிடத்திலும் இளகிய மனம், கூழுக்கும் பாடும் எளிமை, மன்னர்களையும் பணிய வைக்கும் வாக்கு வன்மை, எப்போதும் தமிழ்நாட்டில் ஊர் ஊராய்ச் சென்று மக்களுக்கு அறிவுரை பகரும் உயர்வு ஆகிய பண்புகளெல்லாம் திரண்ட உருவம் ஒளவையார் என்பதும் உள்ளத்தே தோன்றும்.

சங்க காலத்தில் வாழ்ந்திருந்த பழைய ஒளவை யார் அதிகமான் என்ற மன்னனிடம் பேரன்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/237&oldid=613116" இலிருந்து மீள்விக்கப்பட்டது