பக்கம்:கன்னித் தமிழ்.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

கன்னித் தமிழ்


உடையவராக இருந்தார். புறநானூற்றில் அதிக மானை ஒளவையார் பாடிய பாடல்கள் இருக்கின்றன.

சேர குலத்தில் பிறந்து தகடுரில் சிற்றரசனுக இருந்து ஆட்சி நடத்தியவன் அதிகமான் நெடுமான் அஞ்சி. அவனை ஏழு வள்ளல்களில் ஒருவகை வைத்து எண்ணுவர் புலவர். அவன் புலவருக்கு வேண்டிய பொருளும் இரவலருக்கு வேண்டிய உணவு முதலியனவும் தந்ததல்ை மாத்திரம் பெரு வள்ளல் என்ற பெயரைப் பெறவில்லை. ஒளவை யாருக்கு ஒரு நெல்லிக்கனியைத் தந்தமையால்தான் ஏழு வள்ளல்களில் ஒருவன் ஆன்ை.

ஒளவையார் நெடுநாள் வாழ்ந்தமைக்குக் காரணம் நெல்லிக்கனியை உண்டது என்ற கருத்தை அடிக்கடி தமிழ் நாட்டினர் நினைவில் இருத்திக்கொண்டே வந்தனர். அதே ஒளவையார் பல ஆண்டுகள் வாழா விட்டாலும், ஒளவையார் என்ற பெயரும் தத்துவமும் பல நூற்றாண்டுகளாக மறையாமல் ஒளிவிட்டுக் கொண்டே வருகின்றன.

நயமாகப் பிறரது அறியாமையை எடுத்துரைக்கும் ஆற்றல் ஒளவையாருக்கு இருந்தது. . . .

ஒருமுறை அதிகமானிடத்திலிருந்து தொண்டை மானிடம் சென்றார் ஒளவையார். அவன் தன் ஆயுத சாலையைக் காட்டினன். போரிற் புகுந்து வெற்றி காணும் திறத்தை அறியாத தொண்டைமானுடைய படைக்கலங்கள் புதுமெருகு அழியாமல் இருந்தன. அவற்றைப் பார்த்த ஒளவையார் புகழ்வது போலப் பழிக்கும் வகையில் சொல்லத் தொடங்கினர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/238&oldid=1286070" இலிருந்து மீள்விக்கப்பட்டது