பக்கம்:கன்னித் தமிழ்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைச் சங்கம் 25

‘இந்த நாட்டுமொழி எவ்வளவு அழகாக இருக் கிறது! அறிவு சிறந்த இயலும், இன்பம் மலிந்த இசை யும், அறிவும் இன்பமும் ஒருங்கே செறிந்த கூத்தும் நிலவும் இந்த நாடு இறைவனுக்கு உகந்தது. இந்த மொழியில் மீட்டும் நல்ல இலக்கண நூல்கள் எழ வேண்டும் என்று விரும்பினுர் தவமுனிவர் அகத்தியர். இயல், இசை, நாடகம் என்னும் மூன்று தமிழ் நூல் களையும் ஆராய்ந்தார். அவற்றில் வல்ல புலவர் களோடு பழகி மரபு வகைகளைத் தெரிந்துகொண்டார். பேரறிவு படைத்தவராகையால் அந்த மூன்று தமிழுக்கும் உரிய பெரிய இலக்கண நூல் ஒன்றை இயற்றத் தொடங்கினர்.

எந்த வகையிலும் குறைவில்லாத அத் தவ முனிவர் மிக எளிதில் இலக்கண நூலை இயற்றி நிறை வேற்றினர். அகத்தியரால் இயற்றப் பெற்றதாதலின் அதற்கு அகத்தியம் என்ற பெயர் உண்டாயிற்று. பொதியிற் சங்கத்துப் புலவர்கள் அதைக் கண்டு பெரிதும் போற்றினர். பாண்டிய மன்னன் பெருமிதம் அடைந்தான்.

அக் காலத்தில் தமிழ்நாடு மிக விரிவாக இருந்தது. இப்போது தமிழ் நாட்டின் தெற்கெல்லையாக உள்ள குமரி முனைக்கும் தெற்கே பல மைல் தூரம் தமிழ் நாடு பரவியிருந்தது. அங்கே நாற்பத்தொன்பது பகுதிகள் தமிழ் நாட்டைச் சார்ந்திருந்தன் என்று புலவர்கள் தெரிவிக்கிறார்கள். குமரிமலை யென்று ஒன்று இருந்ததாம். குமரியாறு என்று ஒரு நதி அந்த நிலப்பரப்பிலே ஒடியதாம். பஃறுளியாறு என்ற ஆறு ஒன்று மிகத் தெற்கே இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/33&oldid=613217" இலிருந்து மீள்விக்கப்பட்டது