பக்கம்:கன்னித் தமிழ்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைச் சங்கம் 3? ஆகவே பாண்டியனது விருப்பத்துக்கு முனிவர் இணங்கினர். -

அகத்திய முனிவருடைய ஆசி பெற்று மதுரையில் தமிழ்ச் சங்கம் தோன்றியது. புலவர்கள் வண்டுகளைப் போல் வந்து மொய்த்தார்கள். அகத்தியர் பொதியில் மலையில் வாழ்ந்தாலும் பாண்டியனுடைய வேண்டுகோ ளுக்கு இணங்கி அவ்வப்போது தமிழ்ச் சங்கத்துக்கு வந்து போவது வழக்கம். அவரோடு பொதியிலில் அவர்பால் பயிலும் மாணுக்கர் சிலர் வாழ்ந்து வந்தனர்.

சங்கம் வரவரப் புலவர் பெருகி வாழும் இடமாக வளர்ந்தது. தமிழாராய்ச்சி பெருகியது. பாண்டிய னுடைய பாதுகாப்பிலே புலவர் யாவரும் சொர்க்க லோக போகத்தை நுகர்ந்து பழந்தமிழ் நூல்களை ஆராய்ந்தும், புதிய நூல்களை இயற்றியும் இன் புற்றனர். நிரந்தரமாக மதுரையிலே இருந்து வந்தவர் பலர். தமிழ்நாட்டிலுள்ள பல ஊர்களிலிருந்து அவ்

வப்போது வந்து சென்ற புலவர் பலர்.

s அகத்தியர் இயற்றிய அகத்தியமே அந்தச் சங்கப் புலவர்களுக்கு இலக்கணமாயிற்று. முதல் முதலாக ஏற்படுத்திய சங்கம் ஆகையால் அதனைத் தலைச் சங்கம் என்று பிற்காலத்தார் சொல்வது வழக்கம்.

-- தமிழ் நாட்டில் உள்ள புலவர்கள் நூல் செய்தால் தமிழ்ச் சங்கத்துக்கு வந்து அரங்கேற்று வார்கள். சங்கத்துச் சான்றாேர் அவற்றை ஆய்ந்து, பிழையிருந்தால் திருத்தச் செய்து மகிழ்வார்கள். தமிழ் நாட்டினரும் சங்கப் புலவரின் மதிப்பைப் பெருத நூலை நூலாகவே போற்றாத நிலை வந்தது. அதனல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/35&oldid=613223" இலிருந்து மீள்விக்கப்பட்டது