பக்கம்:கன்னித் தமிழ்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

கன்னித் தமிழ்


தமிழ் நூலென்றால் சங்கத்தாருடைய உடம்பாட்டைப் பெறவேண்டும் என்ற நியதி, சட்டத்தால் வரையறுக் கப்படாமல், சம்பிரதாயத்தால் நிலை பெற்றது.

இறையனுர் அகப்பொருள் என்ற நூலின் உரையில் இந்தச் சங்கத்தின் வரலாறு வருகிறது. அதில் உள்ள பல செய்திகள் புராணத்தைப் போலத் தோன்றும். ஆளுலும் அதனுரடே உண்மையும் உண்டு. தலைச் சங்கத்தில் அகத்தியனரும், திரிபுரமெரித்த விரிசடைக் கடவுளும், குன்றம் எறிந்த முருகவேளும், முரஞ்சியூர் முடிநாக ராயரும், நிதியின் கிழவனும், பிறரும் புலவர்களாக இருந்தார்களாம். ஐந்நூற்று நாற்பத் தொன்பது பேர் தலைச்சங்கத்தில் புலவர்களாக விளங்கினர்களாம். சிவபிரானும், முருகவேளும், குபேரனும் தமிழ்ப் புலவர்களாக இருந்தனரென்பதை அவர்களே வந்து புலவர்களோடு புலவர்களாய் இருந்து பேசிஞர்கள் என்று கொள்ளவேண்டிய அவ சியம் இல்லை. தெய்வ பக்தியிலே சிறந்த தமிழ் நாட்டார் சங்கத்தில் அவர்களுக்கென்று ஆசனங்களை இட்டு அவர்களை நினைப்பிக்கும் அடையாளங்களை வைத்து வழிபட்டார்களென்று கொள்ளலாம். பிற் காலத்தில் இத்தகைய வழக்கம் தமிழர் வாழ்க்கையில் பல துறையில் இருந்து வந்ததுண்டு. தெய்வங்களே நினைத்து வைத்த ஆசனங்கள் இருந்தாலும் முதலா சனம் அகத்தியருைக்கே அளித்தனர். தமிழாராயும் இடத்தில் தமிழ்ப் புலவருக்கே முதலிடம் என்ற கொள்கையை இச் செய்தி தெரிவிக்கிறது. . . . . தலைச் சங்கத்தாருடைய மதிப்பைப் பெற்றுப் பாடிய புலவர்கள் 4449 பேர். அவர்கள் பரிபாடில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/36&oldid=1285981" இலிருந்து மீள்விக்கப்பட்டது