பக்கம்:கன்னித் தமிழ்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபாடபுரம் 31

யால் அந்தப் பட்டினத்திற்குக் கபாடபுரமென்ற பெயர் வந்தது. கபாடமென்பது கதவுக்குப் பெயர்.

நாளடைவில் மதுரையில் வாழ்ந்த பாண்டியன் உள்ளத்தில் கடற்கரைப் பட்டினத்திற்கு வந்து அதனையே இராசதானி நகரம் ஆக்கிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உண்டாயிற்று. சேர சோழர்கள் கடற்கரை நகரங்களாகிய வஞ்சியையும் புகாரையும் தலை நகரங்களாகப் பெற்றிருந்தனர். அப்படியே தாமும் கபாடபுரத்தையே இராசதானியாக வைத்துக் கொள்ளலாமென்று தீர்மானித்தனர்.

மதுரையிலிருந்து பாண்டியர் தலைநகரம் கபாட புரத்திற்கு மாறிற்று. மதுரையில் நிகழ்ந்து வந்த தமிழ்ச்சங்கமும் கபாடபுரத்துக்கு வந்தது. கபாடபுரத் துக்கு வந்தது முதல் அந்தச் சங்கத்தைப் பிற்காலத் தார் இடைச்சங்கம் என்ற பெயரால் குறிப்பிடுவர்.

வால்மீகி ராமாயணத்தில் இந்தக் கபாடபுரத்தைப் பற்றிய செய்தி வருகிறது. சீதா பிராட்டியைத் தேடும் பொருட்டு வாணர வீரர்கள் புறப்பட்டபொழுது, அவர் களைப் பார்த்துச் சுக்கிரீவன் இப்படி இப்படிப் போக வேண்டுமென்றும், இன்ன இன்ன இடத்தைத் தாண்டிச் செல்ல வேண்டுமென்றும் சொல்லி அனுப்பு கிருன். அங்கே தாமிரபர்ணி யாற்றைக் கடந்து செல்லுங்கள். ஒரு மட மங்கை தன் கணவனகத்தை ஆவலுடன் அடைவது போல அந்த ஆறு கடலொடு கலக்கும். பின்பு கவாடத்தைப் பார்ப்பீர்கள். பொன் வளம் நிறைந்து அழகு மிக்கதாய் முத்துக்களாலும் மணிகளாலும் அணிபெற்றது அந்நகரம். பாண்டிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/39&oldid=613235" இலிருந்து மீள்விக்கப்பட்டது